திங்கள், 22 ஆகஸ்ட், 2011

மனிதனின் ஆயுள்


அகிலம் வாழும் மனிதனின் ஆயுள்
அறுபது ஆண்டு எனில் - அவனது
முப்பது ஆண்டுகள் இரவின் இருளுள்
மூழ்கி அழிந்திடுமே!

எதுவும் தெரியா சிறுமனத்தோடு
எங்கும் அலைந்திடுவான் - அதனால்
பதினைந்தாண்டுகள் பார்த்திருக்கையில்
பாழ்பட்டொழிந்திடுமே!

பேராசையே மனதிற் கொண்டு
பெரும் பொருள் திரட்டிடுவான் - அவனது
ஆயுளில் ஐந்து ஆண்டுகள் கழிந்து
அசதியும் கண்டிடுவான்!

எஞ்சிய பத்து ஆண்டுகளெல்லாம்
ஏக்கமும் நரையும் விழும் - தொடர்ந்து
உலகைப் பிரியும் நாளை நினைத்து
உள்ளம் துன்பமுறும்!

கூடிய காலம் வாழ்ந்திடவேதான்
மனிதன் ஏங்குகிறான் - ஆனால்
நாடிய இறைவனின் நாட்டம் எதுவோ
அதுவே நடக்கிறது!

(இறுக்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக