புதன், 2 பிப்ரவரி, 2011

ஜோர்தானிலும் புரட்சி! மந்திரி சபை கலைப்பு!!

டியூனீசியா மற்றும் எகிப்தைத் தொடர்ந்து ஜோர்டானிலும் புரட்சி வெடித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலை வாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்தே இந்த மக்கள் புரட்சி வெடித்தது. 'பிரதமர் பதவி விலக வேண்டும், புதிய பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்றதாக யாப்பு மறுசீரமைக்கப்படவேண்டும்' போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.


இதன் போது ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த மன்னர் அப்துல்லா இரண்டு அதிரடி முடிவுகளை அறிவித்தார்.
  1. தற்போதைய மந்திரி சபையைக் கலைத்தல்
  2. யாப்பு மறுசீரமைப்பு
இந்த அறிவிப்புடன் மக்களது போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதன் பிரகாரம் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டு, அவரிடம் யாப்பு மறுசீரமைப்புக்கான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புத்திசாலி மன்னர். தமது இருப்புக்கு ஆபத்து வராமல் வழி பார்த்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக