வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

படி, போராடு, சேவை செய்!

இன்று, உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது.

'படி, போராடு, சேவை செய்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...........

2 கருத்துகள்:

  1. படி, போராடு, சேவை செய் நல்ல ஆழமான செய்திகளைச் சொல்ல வருகின்ற ஒரு விடயம்தான். இன்று நமது இளைஞர்கள் இல்லாமல் போயிருப்பதும் இந்த விடங்கள்தாம். போராடவும் சேவை செய்யவும் முதலில் படிக்க வேண்டுமே. படிப்பு என்பதை தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு குறைந்தபட்சத் தகைகைமயாக மாத்திரமே கருதுகின்ற இக்காலத்துச் சந்ததியினர் போராடுதல், சேவை செய்தல் என்ற அடுத்த கட்ட நகர்வுகளை நினைத்துக்கூடப் பார்ப்பார்களா? நமது இன்றைய இளம் சமுதாயத்தின் மிக முக்கிய தேவை அவர்களிடயே கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாகும். ஆனால் இதனைச் சாதிப்பதற்கும் பின்னைய இரண்டு பண்புகளும் தேவை. எனவே, இப்பணியில் அனைவரது ஒத்துழைப்பையும் நாடுவோம்.

    பதிலளிநீக்கு
  2. nam samuthayaththu maanavarkal kalviththuraiyil maelonga vaendum enpathatkaaka sonthach chelavil palkalaik kazakam amaiththa Naleem Hajiar oru padiththavaralla. aanaal avaridam poarattamum saevai manappangum irunthathu.

    ithae kunam padiththavarkalidam irunthaal.....? innum evvalavoa vetrikalaik kandirukkalaam!

    பதிலளிநீக்கு