இது புத்தளத்து சகோதரர் ஒருவரால் எழுதப்பட்ட கவிதை. பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில், பூஸரி ஆசிரியரால், வாசிக்கப்பட்டு, பலத்த வரவேற்பையும் பெற்றது.
கவிதையின் நோக்கம், தற்போதைய இளைஞர்களின் நிலை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதனை இங்கே பிரசுரம் செய்கிறோம்.
கவிதையின் நோக்கம், தற்போதைய இளைஞர்களின் நிலை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதனை இங்கே பிரசுரம் செய்கிறோம்.
தப்பில்ல தம்பி தப்பில்ல
தம்பி! தப்பில்ல தம்பி தப்பில்ல,
நபி வழியில முடி வளக்குறது தப்பில்ல தம்பி,
ஆனால்,
சில்லென்று ஜெல் போட்டு முள்ளம்பன்றி முள் போல முடி வெக்கிறது தப்பு தம்பி பெரும் தப்பு தம்பி.
ஆனால்,
சில்லென்று ஜெல் போட்டு முள்ளம்பன்றி முள் போல முடி வெக்கிறது தப்பு தம்பி பெரும் தப்பு தம்பி.
குருவிக் கூடு, அமேசன் காடு, செம்மறி ஆடு
இன்னும் என்னென்னவோ அசிங்கங்கள்
குருவிக் கூடு, அமேசன் காடு, செம்மறி ஆடு
இன்னும் என்னென்னவோ அசிங்கங்கள்
உண்ட மண்டையில மண்டியிட்டு இருக்கிறது தப்பு தம்பி இதெல்லாம் தப்பு தம்பி
உம்மாகிட்ட சொன்னா சும்மா இருப்பா தம்பி
ஆனால், அல்லாஹ்கிட்ட போனால் வம்பாப் போயிடும் தம்பி
உன்னை தப்பென்று தப்பிடுவான் தம்பி
உம்மாகிட்ட சொன்னா சும்மா இருப்பா தம்பி
ஆனால், அல்லாஹ்கிட்ட போனால் வம்பாப் போயிடும் தம்பி
உன்னை தப்பென்று தப்பிடுவான் தம்பி
வார பெருநாளைக்காவது இடுப்புட அளவு பார்த்து கழுஸான் வாங்கு தம்பி
தப்பு தம்பி பெரிய தப்பு தம்பி
தொப்புல் தெரிய தொழுவது தப்பு தம்பி
பின் பக்கத்தால ஓண்ட ஜட்டீட Brand காணத் தொழுவதும்கூட மகா தப்பு தம்பி
தப்பில்ல தம்பி தொப்பி போட்டு தொழுறது தப்பில்ல
முஸ்லிம்ட முகத்துக்கு அதுதான் பஸுந்து தம்பி
தப்பில்ல தம்பி தொப்பி போட்டு தொழுறது தப்பில்ல
முஸ்லிம்ட முகத்துக்கு அதுதான் பஸுந்து தம்பி
வீட்டுல மேட்டுல காட்டுல ரோட்டுல உள்ள ஊத்தையையெல்லாம் சேர்த்துட்டு போறாயே தம்பி
தப்பு தம்பி மகா தப்பு தம்பி
ரெண்டு கரண்டைக் காலுக்குக் கீழ கழுஸான் போடுறது தப்பு தம்பி
வீட்டுல மேட்டுல காட்டுல ரோட்டுல உள்ள ஊத்தையையெல்லாம் சேர்த்துட்டு போறாயே தம்பி
தப்பு தம்பி மகா தப்பு தம்பி
இரண்டு கரண்டைக் காலுக்குக் கீழ கழுஸான் போடுறது தப்பு தம்பி
அவ்ரத்தை மூடுறது பெண்களுக்கு மட்டுமில்ல
ஒன்னைப்போல ஆண்களுக்கும்தான் தம்பி
ஆசையா வாங்கினதெண்டு அரைகுறையா உடுக்காம ஔரத்தை மூடி நீ அழகா உடு தம்பி தப்பில்ல
மிச்சம் சல்லி கொடுத்து அங்க இங்க ஓட்ட போட்ட பிச்சக்கார "டீ" ஷர்ட், டெனிம் ஏன் தம்பி வாங்குகிறாய்?
கொஞ்சம் யோசிச்சுப்பாரு நீ
மிச்சம் சல்லி கொடுத்து அங்க இங்க ஓட்டை போட்ட பிச்சக்கார டீஷர்ட், டெனிம் ஏன் தம்பி வாங்குகிறாய்?
கொஞ்சம் யோசிச்சுப்பாரு நீ
உன்னைப் பாக்குற எங்களுக்கே பைத்தியம் போல தெரியிது தம்பி
படச்ச ரப்புக்கு எப்படி இருக்கும் தம்பி
உன்னைப் பாக்குற எங்களுக்கே பைத்தியம் போல தெரியிது தம்பி
படைச்ச ரப்புவுக்கு எப்படி இருக்கும் தம்பி
செல்போன (Cell 4n) 'செல்லப் போனாய்' அனைச்சுக்கிறாய் தம்பி
ஆனால், அல்குர்-ஆனை அடியோட மறந்துடுறாய் தம்பி
தப்பு தம்பி கொடிய தப்பு தம்பி
செல்போன 'செல்லப் போனாய்' அனைச்சுக்கிறாய் தம்பி
ஆனால், அல்குர்-ஆனை அடியோட மறந்துடுறாய் தம்பி
தப்பு தம்பி கொடிய தப்பு தம்பி
ரோட்டுல போற குட்டிகளுக்கு ஸைட்டடிக்கிற தம்பி
ஓண்ட கல்புக்கு முதல்ல வைட் அடி தம்பி
அல்லாஹ் கப்றுக்கு லைட் அடிப்பான் தம்பி
ரோட்டுல போற குட்டிகளுக்கு ஸைட்டடிக்கிற தம்பி
ஓண்ட கல்புக்கு முதல்ல வைட் அடி தம்பி
அல்லாஹ் கப்றுக்கு லைட் அடிப்பான் தம்பி
தப்பில்ல தம்பி தப்பில்ல
தப்பு செஞ்சி திருந்துறது தப்பில்ல
தப்பு செஞ்சிட்டு "இதென்ன தப்பா" என்று தப்பிக்கிறதுதான் தம்பி தப்பு
தப்பில்ல தம்பி தப்பில்ல
தப்பு செஞ்சி திருந்துறது தப்பில்ல
தப்பு செஞ்சிட்டு "இதென்ன தப்பா" என்று தப்பிக்கிறதுதான் தம்பி தப்பு
மறுமைய மறந்து எருமை போல போகாம
ஏண்ட வழி தனி வழி எண்டு போகாம
நம்ம நபி வழிக்கு வா தம்பி அவசரமா வா
கப்று அழைக்குது தம்பி
கல்பு கனக்குது தம்பி
வா தம்பி ஓடி வா
தௌபாவுக்குள் தவழலாம் தம்பி
சுவர்க்கத்துல ஓடிப் பிடிச்சு விளையாடலாம் தம்பி
கப்று அழைக்குது தம்பி
கல்பு கனக்குது தம்பி
வா தம்பி ஓடி வா
தௌபாவுக்குள் தவழலாம் தம்பி
சுவர்க்கத்துல ஓடிப் பிடிச்சு விளையாடலாம் தம்பி
இன்ஷா அல்லாஹ்!
நல்லா இருக்குது தம்பி நல்லா இருக்குது
பதிலளிநீக்கு