சனி, 5 பிப்ரவரி, 2011

நீ மன நோயாளியா? சின்ன மூளைக்காரனா?

எமது கிராமத்துப் பள்ளிவாசல்களில் நேற்றைய குத்பாக்கள் மிகவும் விசேடமாக இருந்ததன. எல்லா மிம்பர்களும், 'அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவினை' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முழக்கமிட்டன.

இவற்றோடு நில்லாமல்,  KAHATOWITA YOUTH UNITY என்ற அமைப்பு, பள்ளிவாசல் அருகே, 'போதைப் பொருள் பாவனைக்கு எதிரான' சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததுடன், ஜும்ஆ தொழுகையின் பின் அதே நோக்கிலான ஒரு துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

எனவே, இந்த குத்பாக்களுக்குப் பின்னால் ஒரு துடிப்பு மிக்க வாலிபர் கூட்டத்தின் திட்டமிட்ட நடவடிக்கை இருந்திருக்கிறது. இவர்களது இந்த அணுகு முறையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஏனெனில், பெரும்பாலான இளைஞர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் போது, இவர்கள், தம்மை பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் நின்று விடாமல், மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

இவர்களுடைய இந்த முயற்சிக்கு நாமும் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும், அது நமது கடமை என்றும் கருதினோம். அதற்கு ஒரு உபகாரமாக, அவர்களது துண்டுப் பிரசுரத்தின் வாசகங்களை அப்படியே இங்கு பிரசுரம் செய்கிறோம்.

 
நீ மன நோயாளியா? சின்ன மூளைக்காரனா?

"இவர்கள் அனைவரும் புகை பிடிப்பவர்கள் அல்ல. ஆனால், புகை பிடிப்பவர்கள் அனைவரும் இவர்களே!"
  • யார் இவர்கள்?!!!
  • விற்பனை செய்பவர்களா?
  • புகை பிடிப்பவர்களா?

போதைப் பொருள் பாவனையின் சில புள்ளி விபரங்கள் 
  • இலங்கையின் மொத்த சிறைச்சாலைகளில் 40% ஆனவர்கள் போதைப் பொருள் பாவனையாளர்களாவர்.
  • இலங்கையில் மொத்தமாக 40000 போதைப் பொருள் பாவனையாளர்கள் உள்ளனர். (எமது ஊரில் உள்ளவர்களும் அடங்கலாம்)
  • 2000 ஆம் ஆண்டில் மட்டும் 10278 போதைப்பொருள் விநியோகத்தர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • இலங்கையில் 200000 கஞ்சாப் பாவனையாளர்கள் உள்ளனர்.
  • பீடா விற்பனை நிலையங்கள் ஒரு ஊருக்கு இரண்டு என்னும் விகிதத்தில் அதிகரித்து வருகின்றது. இதில் முஸ்லிம் ஊர்களே அதிகம் என்பது சுட்டிக் காட்டபடுகிறது.

கஹட்டோவிட்ட, ஓகொடபொல ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி தரும் தகவல்கள் இதோ!!!! 
  • சிகரட், தூள் மடையர்கள் 64%.
  • சிகரட் கம்பனிக்கு சலூட் அடிக்கும் கடைகள் 43%
  • இந்த ஊர்களிலிருந்து மாதத்திற்கு சிகரட் கம்பனிக்கு சம்பாதித்துக் கொடுக்கும் தொகை ஏறத்தாழ ரூ. 185000
  • இந்த மடையர்களைப் பற்றி என்ன சொல்வது?
இவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு?
  • இவர்களது முகத்தோற்றம் அவர்களது வயதை விட முதிய தோற்றமாக இருக்கும்.
  • அருகில் செல்லும் போது துர்நாற்றம் அடிக்கும்.
  • இவர்களது அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது சிகரட், தூள் ஆகும்.

இதனால் விளைவது 
  • சமூக நலனில் அக்கறையின்மை
  • சிறு வயதிலேயே விகாரமான தோற்றம்
  • படிப்பில் அக்கறை செலுத்த முடியாமை
  • வேலையில் தொடர்ந்து நிற்காமை
  • சோம்பேறித்தனம்
இவை தொடர்ந்தால் அல்லாஹ்வின் சாபம் நிச்சயம் இவர்களுக்கு உண்டு.

பாவம் இவர்கள்! சிகரட் கம்பனியின் சூழ்ச்சிக்கும், 'ஜொலி' என்ற மாயைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு, போதை என்னும் மூட நம்பிக்கையில் தவிக்கின்றனர். அது மட்டுமல்ல. இவர்கள்தான், அப்பாவி சிறுவர்களைக் கொலை செய்வதற்கு, தாம் சிரமப்பட்டு உழைத்த பணத்தைக் கொடுப்பவர்கள். இவர்கள் பிடிக்கின்ற சிகரட்டில் இருந்து அந்தக் கொடிய யூதர்கள் இலாபமீட்டுவது தெரிந்திருந்தும், தெரியாதது போல் இருக்கின்றனர். யூதர்களின் சனத்தொகைக் குறைப்புத் திட்டத்தில் இதுவும் ஓர் அங்கமாகும்.

"சிகரட், தூள் விற்பவர்கள், பாவிப்பவர்கள் ஊரைச் சீரழிப்பவர்கள் மட்டுமல்ல, எமது சமூகத்தின் துரோகிகளும் ஆவர்."

இஸ்லாமிய நோக்கு

"உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையவனாக இருக்கிறான்." (அத்தியாயம் 6:25)

"அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமே!!" (அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி)

இன்று பாவனையில் இருக்கும் சிகரட், சுருட்டு, பீடி, தூள் என்பன ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும், இவற்றுக்கு பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும், புகைத்தல் மற்றும் தூள் பற்றிய தீர்ப்பினை ஆரம்ப கால இமாம்கள் வழங்கவில்லை. அறிவு பூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்பட்டதனால், தற்காலத்தில், பெரும்பாலான அறிஞர்கள் புகைத்தல் மற்றும் தூள் பாவனை ஹராம் என்றே ஏகோபித்துச் சொல்கிறார்கள்.

எமது ஊரையும் எமது இளைஞர்களையும் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 
  • முதலாவது, போதைக்கு இட்டுச் செல்லும் சிறிய போதைப் பொருட்களான சிகரட், பிகையிலைத் தூள் என்பவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளை, இவற்றை விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும்.இவர்கள்தான் போதை பரவுவதற்கான ஆணி வேர். ஒன்றின் இருப்பை இல்லாமல் செய்ய, அதன் ஆணி வேரைப் பிடுங்கி எடுத்திட வேண்டும்.
  • சொற்ப, அற்ப இலாபத்துக்கு எமது இளைய சமூகத்தைத் தாரை வார்க்க இடமளிக்க முடியாது.
ஒரு சிலருடைய சுய நலத்துக்கு எமது இளைய சமுகமா விலை?
எத்தனை குடும்பங்கள் கண்ணீருடன் வாழ இந்த வியாபாரிகள் காரணமாகின்றனர்?
இஸ்லாத்துக்காக இந்த ஹராத்தை விட்டு விடுவதனால், இலாபமே கிடைக்கும் என்பதனை ஒவ்வொருவரும் இந்த வியாபாரிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்த தீமையைக் கையினால் தடுக்க முன்வருவோம். எந்த நாளும் ஈமானில் கீழ் தட்டில் இருந்து கொண்டு உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கி தப்பித்துக்கொள்ள முடியாது.
இந்த வியாபாரிகளினால் பாதிக்கப் படப்போவது வேறு யாருடைய பிள்ளைகளுமல்ல. நம்முடைய பிள்ளைகளே! நாளை அது உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம். வெள்ளம் மூக்கைத் தாண்டிய பிறகு கண்ணீர் வடிப்பதால் பயனில்லை.
அல்லாஹ் தடுத்த தீமையை, தீமை என்று சொல்லித் தடுக்க என்ன பயம்?! அதுவும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு?!!
யா அல்லாஹ், இந்தத் தீமையை எமதூரிலிருந்து துடைத்தெறிவதற்கு, எமது மக்களின் உள்ளத்தில் தைரியத்தை ஏர்படுத்துவாயாக.

பெண்களே!

பெண்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் கிடைத்த பொக்கிசமாகும். இதனால்தான், "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்கிறார்கள்.

பெண்கள் செய்ய வேண்டியவை.
  • ஒரு சில சில்லறை ரூபாய் இலாபத்துக்காக சுருட்டு சுற்றும் நீங்கள், சமூகச் சீர் கேடுகளுக்கு ஓர் அடித்தளமாக விரும்புகிறீர்களா?
  • தூள் விற்பனை, கடைகளில் பரவலாக இல்லை. ஆனால், உங்களுக்குத் தெரியாமலேயே, உங்கள் கைத்தொழிலே தூள் பாவனையின் ஆரம்ப இடமாக இருப்பதனால், உங்கள் கைத்தொழிலை மாற்றுங்கள்.
  • சிகரட், பீடி, தூள் விற்கும் கடைகளைப் புறக்கணியுங்கள். அங்கு சாமான்கள் வாங்குவதை நிறுத்துங்கள்

KAHATOWITA YOUTH UNITY (KYU)

 

2 கருத்துகள்:

  1. ஊரில் ஒழுக்கப் புரட்சி ஒன்று ஏற்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. இவர்களது முயற்சி, எல்லா ஒழுக்கச் சீரழிவுகளையும் இல்லாமல் செய்ய மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. கஹட்டோவிட்ட மீண்டும் ஒரு சிறு மக்கமாக மாறுவது ஒன்றும் பெரிய காரியமல்ல.

    பதிலளிநீக்கு
  2. துண்டுப் பிரசுரத்தை இணைத்து உங்களது ஆதரவையும் நல்கியமைக்கு எமது இளைஞர் ஒன்றயத்தின் சார்பாக நன்றிகள் (ஜதாகுமுல்லாஹ்).

    பதிலளிநீக்கு