செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு!

இஸ்லாம்  சார்த்த அமைப்புகளையும் நபர்களையும்   மிகவும் கேவலமாகவும் பயங்கரமாகவும்  சித்தரிக்க  போலியான நாடகங்களை அரங்கேற்றி வருவது CIA உளவு அமைப்பில் கடமையாற்றிய உறுப்பினர்கலாலேயே அவ்வப்போது  வெளிப்படுத்தப்  பட்டுவருகின்றது. முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தமது அனுபவங்களை  வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட   தகவல்களை  நீண்டகால புலனாய்வு ஊடக அனுபவம் கொண்டவரான ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- ஒரு அமெரிக்கர் என்பதுடன் சிறந்த புலனாய்வு எழுத்தாளரும் , புத்தக ஆசிரியரும் SpyTalk என்ற இணையத்தின் சிறந்த கட்டுரையாளருமாவார்.  அண்மையில் முன்னால் CIA உளவாளிகள் தெரிவித்த தகவல்களை  மேலும் இவர் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில் குறிபிடத்தக்கவர்.
அந்த தொடரில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் வெளியிட்டுள்ள தகவலில்,  அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்ட  சதாம் ஹுசைன், மற்றும் உஸாமா பின்  லாதின் போன்றவர்கள் தன்னினச்   சேர்க்கையாளர்கள் என்று காட்டும் போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும்  முயற்சியில் CIA  உளவு பிரிவு ஈடுபட்டமையை  அதன் உறுபினர்களே தெரிவித்ததை  இவர் வெளிப்படுத்தியுள்ளனர்.
SpyTalk. என்ற இணைய நிகழ்ச்சில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவிக்கின்றார்   CIA உளவு அமைப்பு ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்ட கமரா ஒன்றினால் பதிவு செய்யப்பட்டதை போன்ற சதாம் ஹுசைன்  டீன்ஏஜ் வாலிபன் ஒருவனுடன்  பாலியல் உறவு கொள்வதை போன்ற காட்சிகளை தயாரிக்க திட்டமிட்டிருந்ததை முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த முனால் CIA உளவாளி மேலும் உஸாமா பின் லாதினும் அவரின் உறுபினர்களும் ஒன்றாக அமர்திருந்து மதுபானம் அருந்துவது போலவும் தமது பாலியல் தாகத்தை வாலிபர்களை கொண்டு தீர்த்து கொள்வதை போலவும் வீடியோ ஒன்றை தயாரித்துள்ளதாகவும் இதில் நடித்தவர்கள் எமது அமைப்பில் வேலைபார்க்கும் கறுத்த தோல் கொண்ட உறுப்பினர்கள் என்றும் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்
இதேபோன்று பல நாடக விடியோக்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவைகள் ஊடக முகவர்களின் ஊடாக  ஊடகங்களுக்கு வழங்கபடுவதாகவும் தெரிவிக்கின்றார் எனினும் சதாம் ஹசனை தன்னினச்   சேர்க்கையாளர் போன்று காட்சிப்படுத்தும் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் வேறு உபாயங்களை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
அதேபோன்று பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தாலிபான்கள் ஒரு இளம் பெண்ணை நடுவீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஊடகங்கள் ஒளி ஒலி பரப்பியது இது பாரிய உணர்வலைகளை எழுப்பியது இதன் பின்னர் இந்த வீடியோ திட்டமிட்ட முறையில் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் இணைந்து ஒரு அரசசார்பற்ற நிறுவத்தின் உதவியுடன் அந்த வீடியோ தயாரிக்கபடுள்ளது என்ற உண்மையை பாகிஸ்தான் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்தது  இந்த வீடியோ காட்சியில் நடித்தவர்களில் இருந்து பங்குபற்றிய அனைவரூக்கும் அந்த  அரசசார்பற்ற நிறுவனம் பணம் வழங்கியுள்ளது வெளியானதுடன் இந்த வீடியோவில் நடித்த பெண் கைது செய்யப்பட்டார் தற்போதும் இது போன்ற வீடியோகள் உலாவருகின்றன என்பது  குறிபிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக