ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கஹட்டோவிட்ட பாலிகாவில் பெண்களுக்கான 'அஹதிய்யா பாடசாலை' ஆரம்பம்

அஹதிய்யா சம்மேளனத்தின் மற்றொரு கிளையை நிறுவுவது சம்பந்தமான ஒரு கூட்டம் இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் பி.ப. 4:30 மணியளவில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் அஹதிய்யா சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் முபாரக் அவர்களும் கலந்து கொண்டார். எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கான இந்த அஹதிய்யா பாடசாலை பாலிகா வித்தியாலயத்தில் இயங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


"பாலிகாவில் அமையவுள்ள இந்த அஹதிய்யா பாடசாலைதான் இலங்கையில் பெண்களுக்காக பெண்களால் நடாத்தப்படும் முதலாவது அஹதிய்யாவாக விளங்கும்" என டாக்டர் முபாரக் தெரிவித்தார். கல்வி அமைச்சு முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் என்பவற்றில் அங்கீகாரம் பெற்றுள்ள அஹதிய்யா கூடிய சீக்கிரத்தில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் கட்டாயமாக்கப் படவுள்ளதாகவும் இதன் மூலம் எமது மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் சில தொழில் வாய்ப்புகளில் சாதகமான பங்களிப்புகளைச் செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

"ஏற்கனவே முஸ்தபவிய்யா தக்கியாவில் சிறப்பாக நடைபெற்று வரும் அஹதிய்யாவுக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படுமா?" என்று கேட்டதற்கு " அந்த அஹதிய்யா தொடர்ந்து அப்படியே இயங்கும். இது புதிதாக தனித்து இயங்கும். இதனால் அதற்கு எவ்வித பாதிப்புமில்லை. அதனாலும் இதற்கு எவ்வித பாதிப்புமில்லை. மாற்றமாக இரண்டும் ஒத்துழைப்புடன் செயல்படும்" என  பதிலளித்த டாக்டர் முபாரக் " இந்தக் கிளையை பாலிகா வித்தியாலயத்தில் தொடங்குவதை கஹட்டோவிட்டையைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை" எனவும் சுட்டிக் காட்டினார்.

கூட்டத்துக்கு வருகை தந்தோருக்கு அஹதிய்யா சம்மேளன அங்கத்துவ விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன் பதிவு செய்வது தொடர்பான பத்திரங்களும் அவை தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

 

3 கருத்துகள்:

  1. பெண்களுக்கென வேறாக இவ்வாறு அமைவது மிகவும் நல்லது, அதனை நாம் வரவேற்கிறோம். அதோடு

    தளத்தயாரிப்பாலனே, இதில் கல்வி கற்றுக்கொடுக்க வரும் ஆசிரியர் ஆண்களா? அதிலும் திருமணமாகாத ஆண்களா? ஒரு ஊசியின் அளவு இடம் அமைய்ந்தால் போதும் சைத்தான் ஊசலாட

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாதவருக்கு,

    எமது செய்தியை வாசித்து அதிலிருந்த தகவலை விளங்க முடியாமல் போனதையிட்டு வருந்துகிறோம். அதில் தெளிவாக இந்த அஹதியா "பெண்களால் பெண்களுக்காக நடாத்தப்படும்" என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. சரியாகப் புரிந்திருந்தால் அதன் ஆசிரியர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்வி எழுந்திருக்காது.

    உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொன்னது சரிதான், அது அவ்வாறு தொடரவேண்டும்.

    பதிலளிநீக்கு