ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அன்பின் பெறுமதி பூச்சியம்!

எழுதியதை நிறுத்திய சிறுவன் எழுதிய தாளை தன் தாயிடம் நீட்டினான். கைகளைத் துடைத்துவிட்டு தாளை வாங்கிக் கொண்ட தாய் தனது செல்லப் புத்திரன் எழுதியிருந்ததை ஆசையுடன் படித்தாள்.

  • முற்றத்தின் புல் நிலத்தை கத்தரித்து அழகு படுத்தி சுத்தம் செய்தமைக்காக                
  • 5 டொலர்
  • இவ்வாரம் எனது அறையை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்தியமைக்காக            
  • 1 டொலர்
  • உங்களுக்காக கடைக்குப் போய் வந்தமைக்காக                                
  • 1 டொலர்
  • நீங்கள் சாப்பிங் சென்றிருந்த போது எனது சின்ன தம்பியை கவனித்துக் கொண்டதற்காக    
  • 0.5 டொலர்
  • குப்பை கூலங்களை அகற்றியமைக்காக                       
  • 1 டொலர்
  • ரிப்போர்ட் கார்டு வாங்குவதற்காக                    
  • 5 டொலர்
  • முற்றத்தைப் பெருக்கி சுத்தப்படுத்தியமைக்காக   
  • 2 டொலர்
  • மொத்தம் கிடைக்க வேண்டியது              
  • 15.5 டொலர்

இவற்றை வாசித்த தாய் யோசித்தவளாக மகனை சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். பின்னர் அதே தாளைத் திருப்பி மறு பக்கத்தில் எழுதினாள்.

  • உன்னை எனது வயிற்றில் 9 மாதம் சுமந்ததற்கான கூலி              
  • இலவசம்
  • இரவுகளில் உன் பக்கத்திலேயே இருந்த வண்ணம் கண் விழித்து உன்னைப் பராமரித்தமைக்கான கூலி  
  • இலவசம்
  • உன்னுடைய சுக வாழ்க்கைக்காக நான் பட்ட ஏனைய கஷ்டங்கள் மற்றும் உன்னால் ஏற்பட்ட துன்பங்களைப் பொறுத்துக் கொண்டமைக்கான கூலி    
  • இலவசம்
  • உனக்கான உணவுகள் உடைகள் விளையாட்டுப் பொருட்கள்...... ஏன் நீ மூக்கு சிந்தும் போதெல்லாம் துடைத்து சுத்தப்படுத்தியமை போன்றவற்றுக்கான கூலி    
  • இலவசம்
  • எனது அன்புக்கான மொத்தக் கூலி    
  • இலவசம் இலவசம்

தனது தாய் எழுதியிருந்ததை வாசித்த சிறுவனின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் கொட்டியது. பின்னர் அந்தத் தாளின் மறு பக்கத்தைத் திருப்பி மீண்டும் எழுதினான்.
"PAID IN FULL"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக