வியாழன், 17 பிப்ரவரி, 2011

லூத் நபி காலத்து மனிதர்கள் இன்று தோன்றியுள்ள அதிசயம்


 நபி லூத் அவர்களின் காலத்து மனிதர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்ற செய்தி அதிசயமாக இல்லையா?

என்ன இவன், தொடங்கும் போதே புதிரைப் போடுகின்றானே, என்று நீங்கள் எண்ணுவது எனக்குக் கேட்கத்தான் செய்கிறது. இது புதிருமல்ல, புதினமுமல்ல, கதையுமல்ல. இது நிஜம், நிதர்சனமான யதார்த்தம், வாஸ்தவம்.

லூத் நபி காலத்தில் அல்லாஹ்வின் தண்டனை இறங்குவதற்கும் அம்மக்கள் மிகக்கொடூரமாகத் தண்டிக்கப்பட்டதற்கும் காரணம் அவர்கள் லிவாத் எனப்பட்ட கொடிய பாவத்தில் ஈடுபட்டதாகும். லிவாத் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதாகும். இக்காலத்து மக்கள் குறிப்பாக ஆண்கள் ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வதில் இன்பம் கண்டு வந்தனர். இந்த விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுமாறும் இச்செயலை விட்டொழிக்குமாறும் நபி லூத் இம்மக்களிடம் எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவே இல்லை. ஈற்றில் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் சாக்கடலில் தூக்கி அறையப்பட்டதால் மாண்டு போனார்கள். இதனால்தான் சாக்கடலுக்கு (Dead sea) பஹ்ருல்லூத் என்ற பெயரும் வந்தது.

இப்படி இறைவனின் கொடிய தண்டனை ஒன்றுக்கு ஆளான ஒரு சமூகத்தின் செயலை எமது சமூகத்திலும் இன்றும் சில பெரிய (?) மனிதர்கள் சாதித்து வருவது வருந்தத்தக்க ஒரு விடயமாகும். இவர்கள் திருமணம் செய்ய வேண்டிய வயதில் திருமணம் செய்யாமல் காலத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு வந்ததால் வந்த விளைவாகவும் இது இருக்கலாம். சிறு மக்கம் என்று அழைக்கப்படுகின்ற எமது பிரதேசத்திலும் இவ்வாறான லூத் நபியின் சமூக வாரிசுகள் இத்தகைய பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து பலரும் விசனப்பட்டுக் கொள்வதை காணவும் கேட்கவும் முடிகிறது. எமது பிராந்தியத்தில் சமூகப் பணிகளிலும் பொது வேளைகளிலும் சில போது புனிதமான ஆசிரியப் பணியிலும், ஏன் அரசியலிலும் கூட ஈடுபட்டுழைக்கும் முக்கிய புள்ளிகளும் இப்பாதகச் செயலை எவ்விதத் தயக்கமுமின்றி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள், "உங்களை நாம் சோடிகளாகவே (ஆண், பெண்) படைத்துள்ளோம்" (சூரதுந்நபஉ), "உங்களுக்கான மனைவியை உங்களிலிருந்தே படைத்துள்ளோம்" (அந்நிஸா) போன்ற அல்குர்-ஆன் வசனங்களை சிந்தித்துப் பார்க்கட்டும். அல்லது அவர்களுக்கு இவ்வசனங்களின் யதார்த்தங்களை  சம்பந்தப்பட்டவர்கள் உணர்த்தட்டும்.இந்நிலை தொடருமானால் சிறு மக்கமும் குறைந்தது அத்தனகல்லை ஓயாவிலாவது இறைவனால் தூக்கி அறையப்படலாம் அல்லவா?
அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

முதலில் இத்தகைய ஆண் மோகிகளிலிருந்து எமது இளம் ஆண் சிறுவர்களை நாம் பாதுகாப்போம்.

சமூக ஆர்வலர்களே, சமுதாயச் சிற்பிகளே, ஊரின் கண்ணியம் காக்க முன்னின்று உழைக்கும் முனைவர்களே, ஊர் ஜமாஅத்தினரே,
இது உங்கள் சிந்தனைக்கு!

வரலாறு நெடுகிலும் நாம் காணுகின்ற மற்றுமோர் உண்மை யாதெனில் தீமை புரிந்தவர்கள் மட்டும்தான் அழிக்கப்பட்டார்கள் என்பதல்ல, மாற்றமாக தீமையைத் தடுக்காது பார்த்துக்கொண்டு வாழாவிருந்த நல்லவர்களும் தண்டிக்கப்பட்டார்கள் என்பதுதான்.

ஆகவே, இத்தகைய ஆண்களை நாடிச் செல்லும் ஆண்களை நாங்கள் கண்டுபிடித்து அவர்களுக்குப் பொருத்தமான பெண் சோடிகளை அவர்களோடு கைகோர்க்க வழி செய்வோம்.

இதுவும் ஒரு ஜிஹாதுதான். 

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் தளத்தயாரிப்பாலனே,

    நீங்கள் சொல்வது சரிதான் தண்டனை தீமையினை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவனையும் சாரும் என்று சொன்னது அது உங்களையும் சேர்த்துத்தானே. நீங்கள் இதனை மொட்டை தளத்தில் பிரசுரிக்காமல், நீங்கள் சொன்ன அந்த பாவத்தை செய்கின்ற சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதற்கு முடிவினை காணமுடியும் தானே சும்மா ஒளிச்சிக்கொண்டு அடுத்தவனை தூண்டாமல் நீங்கள் முன்னுக்கு வந்து செய்து காட்டுங்கள், உங்களுக்கு உதவியாக நிறையப்பேர் பின்னல் நிற்கும்.

    பதிலளிநீக்கு