அந்த, காதலர் தினமெண்டு சொல்லி உலகமே கூத்தடிச்ச அந்த நாளில, நம்ம பிராந்திய ஸ்கூலொன்றிலேயும் கொஞ்சம் பெடியல்கள் அந்தக் கூத்தோடு சேத்து இன்னுமொரு கூத்தையும் நடத்தி முடிச்சதாக பஜாரில பேசிக் கவலப்பட்டுக் கொண்டாங்களாம்.
அப்படிப் புதுஷா என்னதான் நடந்திருக்குமெண்டு வாத்தியார் துப்புத் துலக்கியதில, அவருக்குக் கெடச்ச சங்கதி இதுதான். அத நீங்களும் ஒருக்காப் படிச்சிப் பாருங்கோவன்!
அது என்னண்டா, அண்டக்கி 14ம் திகதி குறித்த பள்ளிக்கூடத்தில அஸ்ஸெம்பலி நடந்தப்ப, கொஞ்சம் மாணவர்கள் ஏனைய சிலரின் புத்தகப் பைகளை திடீரெனச் செக் பண்ணினப்ப, அந்தப் பைகளில போதையத் தரும் தூள்களும் (குடு) இருந்திச்சாம். இதில்லென்ன பகிடியெண்டால், எல்லாத்தையுமே செயற்கயாச் செஞ்சி பாக்கிற இந்தக் காலத்தில, காதல் மயக்கத்தயும் தூளடிச்சி செயற்கயா எடுக்கப்பாத்ததுதான். இது எப்படீ?
நமது மாணவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? பெற்றோர்களே, விழித்தெழுங்கள்.
thooladiththu thoolai poha vendam ungal shangazi nandraha irunthezu ,nandri
பதிலளிநீக்குஐயா! உங்க தூள் செய்தி "தூல்" கிளப்பிட்டுது போங்க. போர போக்க பாத்தா நம்ம ஸ்கூலெல்லாம் வருங்காலத்துல தூள் வினியோகஸ்தர்களைத்தான் உருவாக்கித் தரும் போல் இருக்கிறது. நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் தமது கடமைகளை முறையாகச் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பூ மரங்கள் நடுவதிலும் பெயிண்ட் அடிப்பதிலும் காட்டுகின்ற அக்கறையை மாணவப் பருவத்தினரை நெறிப்படுத்தி வழி நடாத்துவதில் காட்டலாமே. இதைத்தான் சமகால இஸ்லாமிய அறிஞர் ஒருவர், "வெறுமனே கட்டடங்களைக் கட்டியென்ன பயன், உள்ளங்களைக் கட்டியெழுப்பாமல்?" எனக்குறிப்பிட்டார். இதனை நமது மொட்டைத்தலைமகளும் சற்று சிந்தித்துப் பார்ப்பார்களாக!
பதிலளிநீக்குசமூக அழிவுகளுக்கான காரணங்களுள் ஒன்றாக ஒழுக்க வீழ்ச்சியும் அமைந்திருந்தது என்பதை அல்குர் ஆனை வாசிக்கும் எவரும் அறிந்துகொள்வர். வேலியே பயிரை மேயும்போது .............
இந்த விடயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த "பளிச்" செய்த பெரும் குறை, குறித்த பாடசாலையின் பெயரையும் மாணவர்களின் பெயர்களோடு பளிச்சென்று பிரசுரிக்காமல் விட்டதுதான். உங்கள் நடு நிலைமை பாராட்டுக்குரியதுதான். ஆனால் தீமையைத் தடுக்கும் விடத்தில் Adjustment கூடாது போங்க.
தூள், தூள்.
பதிலளிநீக்குகவலை படவேண்டிய விடயம், பாடசாலை மாணவ மாணவிகளின் நிலை குறித்து இதை விட கூடுதல் கவனம் கடுமையான முறையில் எடுக்கவேண்டும்.
பதிலளிநீக்குஅதோடு இந்த தளத்தயாரிப்பலரை பொறுத்தவரையில் இது அவருக்கு சந்தோசமானதாக இருக்கும் ஏனென்றால் அந்தப்பாடசாளைய்யின் நிர்வாகம், அமைப்பு, ஒழுக்கம் என்பது பற்றி கூடுதலாக எழுதுவதற்கு அவருக்கு சரி விருப்பம். அது அவர் அந்த பரிதாபமான செய்தியினை எழுதியிருக்கும் முறை நன்றாக உணர்த்துகிறது பாவம்.
பெயரில்லா அநாமதேயயனின் கறுப்புக் கண்ணாடிப் பார்வை அது. உண்மையை எவருக்கும் சொல்லலாம். யாராக இருந்தாலும் நியாயத்தை நியாயமாகப் பார்ப்பதே முறையானது. இந்த வெப் சொந்தக்காரன் அப்படியென்றிருந்தால் அவருக்கும் சேர்த்து நான் ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஅண்மைக் காலமாக பாலிகாவிலும் முறை கேடான ஒரு விடயம் நடந்து கொண்டுதானிருக்கிறது. இதற்கு அதிபரின் அசட்டுத்தனமான போக்கும் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது SDS கையாலாகாத்தனமாகவும் இருக்கலாம். பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றும் ஓர் இஸ்லாம் பாட ஆசிரியர், பாடசாலைக்கு வராமலேயே சம்பளம் பெற்று வருகிறார். பாடசாலை நேரத்தில் சிங்களத்தில் தமிழ் கற்பிக்க வெளியே செல்கிறார். இப்படி ஒன்றல்ல, பல. ஒன்றில் அவர் விலகிச் செல்ல வேண்டும் அல்லது நிர்வாகம் அவரை விலக்க வேண்டும். பாலிகா நிர்வாகிகளே! இது உங்கள் சிந்தனைக்கும்தான். போதுமா அனாமதேயனே?
என்ன சகோதரரே இப்படி சொல்லி விட்டீர்கள்? பத்ரியாவின் சோகத்தில் நமக்கு மகிழ்ச்சியா? வீண் பழி சுமத்துகிறீர்கள்! செய்தியை தந்தவருக்குத்தான் அதன் உள்ளடக்கத்தின் பொறுப்பு உள்ளது. அதிலும் தணிக்கைகள் பல செய்த பின்பே வெளியிட்டோம்; பாடசாலைகளுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக. ஒழுக்கச் சீர்கேடுகள் பற்றி தெரிவிக்க விரும்பினோமேயன்றி பக்கச் சார்பு எமது நோக்கமல்ல.
பதிலளிநீக்குஎமது தளம் நடு நிலையாக நிற்க வேண்டும் என்ற உங்களது ஆதங்கத்துக்கு எமது மனமார்ந்த நன்றிகள். ஆக்கபூர்வமான உங்களது விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.
nalan virumbi sonnaalum palich sonnaalum anonymous sonnaalum sangathiyai mattum sollungal. yaar meethum saeru poosa vaendaam. aenendraal, ulloor pirachchinaikal veliyoorkalilum naatramedukkum nilai ungal oor web thalangalinaal uruvaakiyirukkirathu. ungal oorin maanaththai neengalthaan kaaka vaendum.
பதிலளிநீக்கு