ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

நமக்கேன் தேர்தல்?

தேர்தலொன்று அண்மித்த நிலையில் எமது ஊரில் மீண்டும் பிளவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இவை தற்காலிகமானதாக இருந்தாலும் ஏற்கனவே இருக்கின்ற பிளவுகளுடன் இவையும் சேர்ந்து எமது மக்களை கூறு போடுகின்றன. அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் மத்தியில் உருவாக்கப் படுகின்ற கருத்து மோதல்களினால் மில்லிமீட்டர் கணக்கில் உருவாகும் ஒற்றுமை கூட மீட்டர் கணக்கில் சீர் குலைந்து விடுகிறது. இவ்வாறு அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் எமது கூட்டுறவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்து வருவதை கவலையுடனாவது சொல்லித்தான் ஆக வேண்டும்.


அது ஒரு புறமிருக்க இந்த தேர்தல்கள் மூலம் எமது ஊரின் அபிவிருத்தி தொடர்பில் நாம் எவ்வாறான நன்மைகளை அடைந்திருக்கிறோம் என்பதை ஒரு கணம் சிந்திப்பது எமது கடமையாகும். கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் எங்களை விட மிகவும் பிந்தங்கியிருந்த எங்களைச் சூழவுள்ள கிராமங்கள் இன்று எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கின்றன என்பதை நாம் இங்கு சொல்ல வேண்டியதில்லை.
  • எமது வீதிகள் இன்னும் அபிவிருத்தியடையவில்லை
  • எமது பாடசாலைகளில் வளங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.
  • ஊரின் பொருளாதாரத்தை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லை.
  • கல்வித்துறை மற்றும் தொழிற்றுறைகளில் முன்னேற்றமில்லை.
  • இன்னும் எத்தனையோ ..............

நாம் நமக்கு மத்தியில் ஏற்படுத்திக் கொண்ட பிளவுகள்தான் நாம் பின் தங்கியமைக்கான பிரதான காரணம் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். தொடர்ந்தும் இவ்வாறான பிளவுகள் எம்மை பின் தள்ளுமே ஒழிய முன்னேற்றத்தை வழங்கப்போவதில்லை. எனவே இஸ்லாத்தின் கொள்கைகளை உதறித் தள்ளிவிட்டு கட்சிகளின் கொள்கைகளுக்குக் கீழ் முஸ்லிம்களின் கூட்டுறவை சீரழித்து வாக்குகளை வேட்டையாட நினைப்பது வடிகட்டிய மடமையாகும்.

இஸ்லாம் வெற்றி பெறுவதற்காகப் பாடுபட வேண்டிய நூறு வீத முஸ்லிம்களைக் கொண்ட எமது கிராம மக்களை இஸ்லாம் அல்லாத கொள்கையொன்றை வெற்றி பெற வைப்பதற்காக பிளவு படுத்துவது மற்றும் வாக்களிக்க வைப்பது என்பன எவ்வளவு பாரதூரமான செயல் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நம் எல்லோரதும் கடமையாகும்.  

1 கருத்து:

  1. emathu ooril thaerthal kaalangalil tha'waa iyakkangalaich chaernthavarkal avviyakkangalil irunthu vilaki thaerthalil vaelai seyyum nilai irukkirathu. athaiyum ingu solliyirukkalaam. ivarkalidam naan kaetka virumbum kaelvi, "muslimaaka irunthu kondu arasiyal seivathai islaam virumbavillaiyaa?"

    பதிலளிநீக்கு