இன்று, உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது.
'படி, போராடு, சேவை செய்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...........