ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஏழைகள் திலகம் நஜீம் நானா வழங்கும் கல்விச் சகாய நிதி

அத்தனகல்ல பிரதேச சபையில் எமது ஊரைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், ஏழைகளின் தோழன், ஜனாப் நஜீம் நானா அவர்கள் வழங்கியிருந்த தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, தனது மாதாந்த சம்பளத்தை வறிய மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் முதல் கட்ட நிகழ்வு சமீபத்தில் ஹொரகொல்ல கிராமத்தில் இடம்பெற்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஃப்.எம். ஸாஜித் என்பவரே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நஜீம் நானாவின் உதவு தொகையைப் பெற்றுக் கொண்ட முதல் மாணவராவரர்.

இந்த நிகழ்வையே மேலேயுள்ள புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.

இவரது இந்த உதவு தொகை எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபா 1000 வீதம், தொடராக வழங்கப்பட இருப்பதாக நஜீம் நானா பளிச்சிடம் தெரிவித்தார்.

வாழ்க நஜீம் நானாவின் கல்விப் பணி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக