புதன், 18 ஜனவரி, 2012

மிகப்பெரிய இஸ்லாமிய இணைய நூதனசாலை

 இஸ்லாமிய வரலாற்று அரும்பொருட்களை உலக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மிகப்பெரிய இணைய நூதனசாலையை, ஐக்கிய நாட்டுச் சபை ஏற்படுத்தவுள்ளது.


இவ்விணையத்தில் அரும்பொருட்களின் புகைப்படங்கள் இடம்பெறவுள்ளதோடு உமையாக்கள், அப்பாசியர், பாதிமிய்யாக்கள், உஸ்மானியர் காலத்து கலை மற்றும் வரலாற்று விடயங்கள் புகைப்படங்களுடன் விபரிக்கப்படவுமுள்ளன.

மேலும் இஸ்லாமிய உலக வரலாற்றில் பண்பாட்டு அம்சங்களும் இணையத்தில் கூறப்படவுள்ளது.
இவற்றில் இஸ்லாமிய பெண்ணிலைவாதம், இஸ்லாமிய வரலாற்றில் பெண்ணிலை உயரிய நிலையில் காணப்பட்டமை, பெண்ணுரிமை பேணவும் மதிக்கவும் குர்ஆனின் கட்டளை, மற்றும் கல்வி, கலாசார, சமூக, அரசியல் விவகாரங்களில் பெண்களின் பங்கு என்பனவும் உள்ளடங்கும்.

இவ்விணைய நூதனசாலையில் எகிப்து, ஜேர்மனி, அல்ஜீரியா, இத்தாலி, மொரோகோ, பலஸ்தீன், போலந்து முதலான நாடுகள் பங்குகொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக