திங்கள், 23 ஜனவரி, 2012

மீண்டும் ஊரில் ஒரு பாமஸி


எமது கிராமத்தின் குறைபாடுகளுள் ஒன்றாகவிருந்த 'பாமஸி' மருந்துக் கடை, மீண்டும் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளிவாசலின் அருகில் திறக்கப் படவுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.


எமது ஊரைச் சேர்ந்த ஜனாப் ஹிமாஸ் அவர்கள், வரக்காப்பொளையில் நடாத்தி வந்த பாமஸியே, எமது ஊரில், குறித்த இடத்தில் திறக்கப் படவுள்ளது.

ஏற்கனவே, முதல் தடவையாக, மௌலவி முஜீப் அவர்களினால் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பாமஸி ஆரம்பிக்கப்பட்டு,சில வருடங்கள் நடாத்தப் பட்டதும்; இரண்டாவது தடவையாக, ஜனாப் ஸில்மி அவர்களின் இரசாயன கூட (LAB) கட்டடத்தில் மற்றொரு பாமஸி ஆரம்பிக்கப்பட்டு, சில மாதங்களிலேயே மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியோ, எமது ஊராரின் தேவைகள் ஊருக்குள்ளேயே பூர்த்தி செய்யப்படும் அளவுக்கு தன்னிறைவு பெறுவது, எமது ஊரின் அபிவிருத்தியில் ஒரு பாரிய பங்களிப்பாகும். 

4 கருத்துகள்:

  1. பாவம் பொது மக்கள். ஜயவீர் டொக்டொர் என்றால் ஹிமாஸ் ஃபாமஸி போடுவதும் அவசியம்தான். வாழ்க kahatowita மக்காள்!!!!!!!!!!!!
    கல்வியில் யாழ்ப்பாணம் போல் என்று கேள்வி????
    உங்கலது படித்த குடும்பம் என்னாதான் செய்கிறது?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாச் சகோதரரே! நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்பதைச் சற்றுத் தெளிவுபடுத்துவீர்களா?? தனுஷ் பாடுறது மாதிரி, "ஆக மொத்தம் ஒன்னும் புரியல."

    பதிலளிநீக்கு
  3. துக்ளக் என்ற போர்வையில் மறைந்திருக்கும் தள ஆசிரியரே..
    உங்களுக்குத் தேவையா சினிமாப் பாடல்..?

    பதிலளிநீக்கு
  4. முஹம்மத் பின் துக்ளக்12 பிப்ரவரி, 2012 அன்று PM 5:27

    மிஸ்டர் பெயரில்லா...
    எய்தவனிருக்க ஏனய்யா அம்பை ஏசுகிறீர்? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! துக்ளக் நான்தான். தள ஆசிரியரல்ல. வெறுமனே அனுமானங்களை வைத்துத் தீர்ப்பு வழங்குவது குறித்து யோசியுங்கள்!

    பதிலளிநீக்கு