திங்கள், 23 ஜனவரி, 2012

நஜீம் நானாவுக்கு ஜே!


அத்தனகல்ல பிரதேச சபையினால் எமது ஊரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பைகளை அகற்றும் பணி, பிரதேச சபை அங்கத்தவரான ஜனாப் நஜீம் நானா அவர்களின் முயற்சியால், மேலும் விஸ்தரிக்கப் பட்டுள்ளது.


இதுவரை காலமும் பிரதான வீதியில் மட்டும் வந்து சென்ற குப்பைகளை அகற்றும் வாகனம், தற்போது பல கிளை வீதிகளிலும் சென்று குப்பைகளை அள்ளிச் செல்கிறது.

தமது வீட்டுக் குப்பைகளை அகற்றுவதற்காக, குப்பை வண்டி வந்து செல்லும் பிரதான வீதி வரை குப்பைகளை உறைகளில் சுமந்து சென்ற பலருக்கு இத்னால் ஒரு சுமை குறைந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட முயற்சிக்காக நஜீம் நானாவுக்கு ஒரு ஜே போடுவதுட்ன், கழிவு நீரை அகற்றுவதற்கான வடிகாலமைப்பு, மின் விளக்குகள் அற்ற வீதிகளுக்கு விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குன்றுகளும் குழிகளும் நிறைந்த வீதிகளை செப்பனிடுதல் போன்ற அபிவிருத்திப் பணிகளிலும் அவரது கவனம் செலுத்தப்பட வேண்டுமென பளிச்! தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.


1 கருத்து:

  1. Najeem Nana has born to service we know how he works even before he come to attanagalla predsiya saba. we wish him to continue his works.

    பதிலளிநீக்கு