இன்று இரவு இஷாத் தொழுகையின் பின்னர் ஹுவைஸ் நானா வீட்டு முன்றலில் நடைபெற்ற, கல்வியை இஸ்லாமிய மயப்படுத்தலின் அவசியம் தொடர்பான சகோதரர் ரௌஃப் ஸெய்னின் ஆய்வுரை மிக மிகப் பயனுள்ளதாய் அமைந்திருந்தது. இந்தக் கருத்தியலை ஆசிரியர்களே வளர்த்தெடுக்க வேண்டுமெனவும், அவ்வாறான சிந்தனைத் தாக்கம் மிக்க்கவர்களாக ஆசிரியர்கள் முதலில் திகழவேண்டுமெனவும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இது ஓர் அமானீதம் எனவும் இந்த நிலை அற்றுப் போனதுதான் முஸ்லிம் சமூகம் க்கல்வித்துறையில் நலிவுற்றதற்கும் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டதோடு, இன்றுள்ள முஸ்லிம் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றத் தவறிவிடுகின்றனர் எனவும் கடிந்துக்கொண்டார். இந்த உரையைச் செவிமடுக்க ஆசிரியர்களும் பிரசன்னமாகி இருந்தனர் என்பது கவனிகத்தக்கது. இந்தமாதிரியான உரைகள்தாம் காலத்தின்தேவை என்பதற்க்கப்பால் குத்பாக்களிலும் இடம்பெறச் செய்யப்படவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக