புதன், 5 ஜனவரி, 2011

கஹட்டோவிட்ட பிரதான வீதியின் நிலை?!

கஹட்டோவிட்ட பிரதான வீதியை அகலமாக்கிப் புனரமைக்கும் திட்டம், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டு, தற்போது,
உத்தேசிக்கப்பட்ட வீதியின் அகலம் அடையாளமிடப்பட்ட நிலையில் இருக்கிறது. பிரதேச சபையினால் அடையாளமிடப்பட்ட இந்தக் கற்கள் நடப்பட்டு சுமார் ஒரு வாரம்தான் ஆகிறது. இவற்றுள் சில, நடப்பட்ட இடங்களிலிருந்து பிடுங்கப்பட்டு, வீதியருகே எறியப்பட்டிருந்ததை இன்று (05.01.2011) அவதானிக்க முடிந்தது.

வீதிப்புனரமைப்புக்கு எதிரானவர்கள்தான் இதனை செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வீதிப்புனரமைப்பு பணிகளை முன்னெடுப்போர் பகிரங்கமாக செயல்படும்போது, இவ்வாறு மறைந்திருந்து சதி வேலைகளில் ஈடுபடுவது கோழைத்தனமானது. இவர்கள் தமது எதிர்ப்பை, நியாயமான காரணங்களுடன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கருத்துக்கு ஆதரவைத் திரட்ட முடியும்.

எந்தக் கருத்துக்கு ஆதரவு அதிகமாக உள்ளதோ அந்தக் கருத்துக்கு அமைவாக நடப்பதே சாலச் சிறந்தது.

வீதி வந்தாலும் வராவிட்டாலும் ஊரின் ஒற்றுமை முக்கியமானது. ஏனெனில் சமூக ஒற்றுமை இஸ்லாத்தில் மிக மிக முக்கியமானது.

எல்லோரும் இதை உணர்ந்து செயல்பட்டால் சரி!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக