சனி, 22 ஜனவரி, 2011

சட்டத்தின் முன்னே

அப்பாஸியப் பேரரசின் முதல் கலீபாவான அபுல் அப்பாஸ் அஸ்ஸப்பாஹ்வின் சகோதரர் அபூ ஜ ஃபர் அல்-மன்ஸூர் (இவரும் அப்பாஸியப் பேரரசின் கலீபாவாக இருந்தவர்) ஒரு சமயம் ஒரு பிரயாணத்தில் ஈடுபட்டார். இடையே ஓரிடத்தில் இரவு தங்கவேண்டி ஏற்பட்டது. எனவே அங்குள்ள விடுதியொன்றை அணுகினார்.


அந்தக் காலத்தில் அந்த விடுதியில் தங்குவதற்கு இரண்டு வெள்ளி நாணயம் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம். அன்று கல்வியைத் தேடிப் பயணப்பட்டிருந்த மன்ஸூர் விடுதியின் பொறுப்பாளரிடம் ;"நான் இந்த நாட்டு கலீபாவின் சகோதரன்; நாம் நபி (ஸல்) அவர்களின் சந்ததிகளாவோம். எனவே என்னிடத்தில் வாடகை வசூலிக்கக் கூடாது" எனப் பெரிதும் வலியுறுத்திக் கூறினார்.  ஆயினும் விடுதியின் பொறுப்பாளர் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதிப் பொறுப்பாளர் மன்சூரிடம் பின்வருமாறு அமைதியாகக் கூறினார்.

"நீங்கள் கூறுவது சரிதான்; ஆனால் இந்த நாட்டின் சட்டத்தை என்னால் மீற இயலாது. நீங்கள் இரண்டு நாணயங்கள் தந்துவிட்டுத் தாரளமாகத் தங்கலாம்."

இரண்டு வெள்ளி நாணயங்கள் தருவதைத் தவிர கலீபாவின் சகோதரர் மன்ஸூருக்கு வேறு வழி இருக்கவில்லை.
(இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக