செவ்வாய், 18 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 2

சிந்தனா ரீதியான படையெடுப்பு!
இன்றைய முஸ்லிம் சமூகம், ஏக காலத்தில், பல்வேறுபட்ட படையெடுப்புகளுக்கு ஆளாகியுள்ளது. எமது முஸ்லிம் நாடுகள் பல, இராணுவ ரீதியான படையெடுப்புகளுக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளன. இந்தப் படையெடுப்பின் அவலங்களை, அவற்றின் மோசமான விளைவுகளை நாம் பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

மற்றொரு பக்கத்தில், முஸ்லிம் உம்மத், சிந்தனா ரீதியான ஒரு படையெடுப்புக்கும் உலகளாவிய ரீதியில் முகம் கொடுத்து வருகிறது. இராணுவ ரீதியான படையெடுப்பு பற்றிய புரிதல் எம்மில் பலருக்கு இருந்தாலும், சிந்தனா ரீதியான படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு பற்றிய புரிதல் மிக மிகக் குறைவாகவே உள்ளது.

இவை மட்டுமன்றி, மற்றொரு படையெடுப்புக்கும் எமது சமூகம் தொடர்ந்து முகம் கொடுத்து வருகிறது. அதுதான் உள ரீதியான படையெடுப்பு. இந்த உம்மத்தை உள ரீதியாக வீழ்த்துகின்ற, பலவீனப்படுத்துகின்ற, தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்துகின்ற ஒரு பயங்கர முயற்சியும் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இராணுவ ரீதியான படையெடுப்பை விட பயங்கரமானதாக நாம் கருத வேண்டியது இந்த உள ரீதியான படையெடுப்பைத்தான்.

எமது நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்துகின்ற, எமது பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கின்ற, எம்மை, எமது தனித்துவத்தை, எமது அடையாளத்தை இல்லாதொழிக்கின்ற இந்தப் பயங்கரமான சிந்தனா ரீதியான படையெடுப்பைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலிருப்பது மிகவும் துரதிஷ்ட வசமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக