புதன், 19 ஜனவரி, 2011

வீதி விஸ்தரிப்புக்கு எதிரான பெட்டிசன் நிராகரிப்பு

கஹட்டோவிட்ட பிரதான வீதியின் விஸ்தரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'பெட்டிசன்' அதிகாரிகளால் நிராகரிக்கப் பட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.


வீதி விஸ்தரிப்புக்கு எதிரான சிறு குழுவினர், சிலரது கையொப்பத்துடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் போன்றோருக்கு பிரதிகள் சகிதம் அனுப்பிய பெட்டிசனே இவ்வாறு நிராகரிக்கப் பட்டுள்ளது.

இந்த பெட்டிசன் சம்பந்தமாக கள நிலைமைகளை அவதானித்த அதிகாரிகள், கையொப்பமிட்டோரின் கட்டடங்கள் அனைத்துமே "அனுமதியின்றி கட்டப்பட்டவை" என்பதால், அவற்றை 'தேவையான அளவு உடைத்து வீதியை விஸ்தரித்தே தீருவோம்' என உறுதியாகக் கூறியுள்ளனர்.

இந்த பெட்டிசனை எழுதி அனுப்பியவர்கள், தங்களது தொலைபேசி இலக்கங்களை பிழையாக எழுதி இருந்ததாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சில தொலைபேசி இலக்கங்கள் 8 இலக்கங்களுடனும், மற்றும் சில 6 இலக்கங்களுடனும் இருந்ததாக கடைத் தெருக்களில் தமாசாக பேசப்படுகிறது.

இவ்வாறான எதிர்ப்புகள் முன்னெடுக்கப்படும் போது, வீதி விஸ்தரிப்பு சாத்தியமா என வினவப்பட்டதற்கு, "இதனை நாம் சாதித்தே தீருவோம். பொது மக்களின் மன உளைச்சலைக் கொட்டிக்கொள்ளும் விருப்பம் இல்லாததால்தான் சற்று தாமதிக்கிறோம். அண்மையில் தேர்தலொன்று வருவதும் தாமதத்துக்கு மற்றொரு காரணம். எனவே, தேர்தல் முடிந்தவுடன் நமது பணியை நாம் தொடர்வோம்" என விஸ்தரிப்புப் பணிக்கு முழு ஆதரவு வழங்கும் ஒரு அன்பர் கூரினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக