முஸ்லிம் பாலிகா வித்தியாலய கலை விழா
கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவிகளின் கலை விழா இன்று (03.04.2010) இடம்பெற இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண சபையின் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் வருகை தர இருப்பதாக பாடசாலையின் அதிபர் உடயார் அறிவித்துள்ளார். இதன் போது மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெற இருப்பதாக அதிபர் மேலும் கூறினார்.
அத்துடன், அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்களினால் பாடசாலை அபிவிருத்திக்காக ரூ. 100,000.00 நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரபி ஒருவரின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் இரண்டு மாடிக் கட்டடத்தின் வேலைகளும் நடைபெற்று வரும் இவ்வேளயில், இந்த அபிவிருத்தி உதவிகளும் கிடைத்திருப்பது பாலிகா நிருவாகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எனவே, எல்லாம் வல்ல இறைவனின் அருளினால், பாலிகா பாடசாலையை கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் கல்லூரியாக அபிவிருத்தி செய்வதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக இதனை நாம் கொள்ளலாம் என பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளினால், பாலிகா பாடசாலையை கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் கல்லூரியாக அபிவிருத்தி செய்வதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ். தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த உதவிகளும், அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் அயராத முயற்சிகளும் ஆதரவாள்ர்களின் துஆக்களும் இறைவனின் அருளும் சேர்ந்து நிச்சயம் இந்த நிலையை ஏற்படுத்தும்.
பதிலளிநீக்கு