வியாழன், 22 ஏப்ரல், 2010

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிளை கஹட்டோவிட்டவில்?!

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளையொன்றை எமது ஊரில் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக 'பளிச்' இற்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சர் அவர்கள் வழங்கி இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன. அரசாங்கக் கட்சி ஆதரவாளர்கள் சிலரே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

எமது ஊர் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்குக் காரணம் என ஒரு சிலர் பேசிக் கொண்டார்கள். ஊரிலுள்ள கட்சி வேறுபாடுகளுக்கு மத்தியில், அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அதிகமாக உள்ள நிலையில், இது சாத்தியமா என வேறு சிலர் கேள்வி எழுப்பினர். குறித்த கிளை ஆரம்பிக்கப்பட்ட பின், அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட, தற்போதைய எமது பிரதேச சபை உறுப்பினரான ஜனாப் நாஸர் அவர்களை நிறுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளதாகவும் விபரமறிந்த மேலும் சிலர் கூறினர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாங்கு உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவகியிருப்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக