எமது பாடசாலை(பத்ரியா)யில் நீண்ட காலமாக கற்பிக்கும் ஆசிரியையான ஜனாபா ரஈஸா அவர்கள் வாகன விபத்தொன்றில் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த 13 ஆம் திகதி தமது கணவருடன், கணவரின் குடும்பத்தாரை தரிசிக்க, தமது வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது இவரது சிறு குழந்தையும் காடயமடைந்துள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறின.
தலையில் காயம் பட்ட நிலையில் Bed Rest பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த நல்லாசிரியை இவ்வருட 4-A வகுப்புக்கு பொறுப்பாக இருப்பவராவார். இவர் தமது குடும்பத்தாருடன் அடுத்த வாரம் 'உம்ரா'வுக்காக மக்கா செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அன்னாரதும் காயமடைந்த ஏனையோரதும் சுகத்துக்காக 'பளிச்' பிரார்த்திக்கிறது. வல்ல நாயன் அவர்களுக்கு கூடிய கதியில் சுகத்தை நல்குவதுடன் அவர்களது குடும்பத்தாரின் துயரங்களையும் போக்குவானாக..
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு