வியாழன், 22 ஏப்ரல், 2010

ஒழுக்கச் சீர்கேட்டுக்குத் தீர்வு தேடும் முயற்சி

ஊரின் கல்வி முன்னேற்றம் சம்பந்தமாகவும் ஒழுக்கச் சீர்கேட்டுக்கு முடிவு கட்டுவது சம்பந்தமாகவும் கடந்த வாரம் MLSC யின் காரியாலயமான தாருஸ்ஸலாமில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இது பற்றி இந்தத் தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்தக் கலந்துரையாடலின் பின், கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்க வாழ்வு ஆகிய இரண்டு நோக்கங்களுக்காகவும் பள்ளிவாசல்களின் நிருவாகிகளும் உள் வாங்கப்பட்ட ஒரு அதிகாரம் பொருந்திய குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இதற்கான அடுத்த கூட்டம் 25.04.2010 ஞாயிற்றுக் கிழமை தாருஸ்ஸலாம் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கான அழைப்பு, பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு, ஜனாப் MAMM ஜிப்ரி, ஜனாப் MAM ஸில்மி மற்றும் ஜனாப் MFM பயாஸ் ஆகியோரின் ஒப்பத்துடன், ஊர்ப் பள்ளிவாசல்களுக்கு அனுப்பப் பட்டுள்ளன.

இந்தக் கூட்டம், குறித்த நோக்கத்தை அடைந்து கொள்ளும் சிறந்த ஒரு கூட்டமாக அமைய எமது பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக