ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புதிய பாராளுமன்றில் முஸ்லிம் எம்.பிக்கள்

கடந்த 08.04.2010 இல் நடைபெற்ற, 14 ஆவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் போதியளவு முஸ்லிம்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப் படாமை ஒரு பெருங்குறையாகும். இம்முறைய தேர்தலில் சிங்களத் தேசியவதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலை தூக்கி இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அத்து டன், 'ஒற்றுமை இல்லாத ஒரு சமூகத்துக்கு சிறந்த தலைமை எப்படி வரப்போகிறது?' என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. கூட்டாகச் சேர்ந்தால் மாத்திரமே ஒருவரையாவது பெற்றிருக்க முடியும் என்ற நிலையில் உள்ள எமது மாவட்டத்தில் கூட எத்தனையாகப் பிரிந்து நாம் வாக்களித்தோம்? இதன் மூலம் நாம் எதைப் பெற்றுக் கொண்டோம்? எமக்கென்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை எப்போது நாம் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? இனிமேலாவது சிந்திக்குமா நமது சமூகம்?

எவ்வாறாயினும், இது வரை தெரிய வந்துள்ள தகவல்களின் படி, பின்வருவோர், எமது பிரதிநிதிகளாக தெரிவாகி உள்ளனர் என்பது சற்றேனும் ஆறுதல் தரும் செய்தியாகும்.

1. A.H.M. பௌஸி,                                      கொழும்பு மாவட்டம்,
2. கபீர் ஹாசிம்,                                        கேகாலை மாவட்டம் 
3. A.L.M. அதாவுல்லா                               திகாமடுல்ல மாவட்டம்
4. H.M.M. ஹரீஸ்                                       திகாமடுல்ல மாவட்டம்
5. M.C.M. பைஸல்                                      திகாமடுல்ல மாவட்டம்
6. ரிஷாத் பதியுத்தீன்                               வன்னி மாவட்டம்
7. உனைஸ் பாரூக்                                  வன்னி மாவட்டம்
8. நூர்தீன் மஷூர்                                      வன்னி மாவட்டம்
9. M.L.A.M. ஹிஸ்புல்லா                         மட்டக்களப்பு மாவட்டம்
10. ..சீர் சேகு தாவூத்                                 மட்டக்களப்பு மாவட்டம்
11.ரவூப் ஹகீம்                                          கண்டி மாவட்டம்
12.அப்துல் காதர்                                        கண்டி மாவட்டம்

2 கருத்துகள்:

  1. arasiyal saanakkiyam illaathathaal vantha viLaivu! thorkkum kuthiraikku yaarum panthayam kattuwaarkalaa? aam, athu engal ooril nadakkirathu! immuraiyum sumaar 1300 vaakkukal veenukkaaka alikkap pattullana. emathu ooraarin sinthanai kavalai tharukirathu.

    பதிலளிநீக்கு
  2. very good news R........................

    பதிலளிநீக்கு