திங்கள், 5 ஏப்ரல், 2010

கஹட்டோவிட்ட - வெயாங்கொட
பஸ் சேவை விஸ்தரிப்பு


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திஹாரியினூடான கஹட்டோவிட்ட - வெயாங்கொட பஸ் சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாக குறித்த வீதியில் பணி புரியும் பஸ் நடத்துனர் ஒருவர் கூறினார். பஸ் சொந்தக்காரர்களின் வருவாய் திருப்தி அளிப்பதாக இருப்பதனால், அவர்களாலேயே இந்த விஸ்தரிப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிட்டம்புவையிலிருந்து மாலை 6.45 க்கு, கஹட்டோவிட்டைக்கான கடைசி பஸ் புறப்பட்டு, இரவு 7.30 க்கு ஊரை வந்தடைகிறது. அனால், புதிய முன்மொழிவின் படி, நிட்டம்புவையிலிருந்து இரவு 7.45 க்கு புறப்படும் பஸ் வண்டி, எமதூரை இரவு 8.30 க்கு வந்தடையும். இன்னும் ஓரிரு வாரங்களில் திருத்த வேலைகள் முடிவடைய இருக்கின்ற பஸ் வண்டி தயாரானதும் இந்த சேவை விஸ்தரிப்பு ஆரம்பிக்கப்படும் என அந்த நடத்துனர் மேலும் குறிப்பிட்டார்.

கஹட்டோவிட்ட 'ஜயவேவா'

1 கருத்து: