சனி, 17 ஏப்ரல், 2010

ஊரில் நடைபெறும் ஒழுக்கச் சீர்கேடுகளை எவ்வாறு தடுக்கலாம்?

சமீப காலமாக எமது ஊரில் ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. மது அருந்துதல், ஏனைய போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், விபச்சாரம் போன்ற இன்னோரன்ன அனாச்சாரங்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் பரவலாக நடைபெறுவதாக ஊரில் பலரும் கதைத்துக் கொள்கிறார்கள். இந்த விடயம் சம்பந்தமாக எமது ஊரின் பிரதான வெப் தளங்கள் கூட செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரு வாசகர், 'எழுதுவதை மட்டும் செய்யாமல் இதற்கு எதிராக ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கலாமே'  என்ற தொனியில் எழுதிய கருத்தும் வெளிவந்திருந்தது. 

இவ்வாறான ஒரு நிலையில், எமதூரின் ஒழுக்க விடயங்களில் அக்கறை கொண்ட சில அபிமானிகள், புத்தி ஜீவிகள் மற்றும் பள்ளிவாசல் / இயக்க அங்கத்தவர்கள் இணைந்த ஒரு  கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடலின் மூலம் அனாச்சாரங்களுக்கு எதிராக செயற்படும் ஒரு குழுவை உருவாக்கி, ஊராரின் பூரண ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளில் இறங்குவதே நோக்கம் என ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ள செய்தியும் 'பளிச்' இற்குக் கிடைத்துள்ளது.

இந்த நல்ல நோக்கம் நிறைவேற எமது வாழ்த்துக்கள்!

'நமைகள் ஏவப்பட்டு தீமைகள் தடுக்கப்படும் போதுதான் நாங்கள் ஒரு சிறந்த சமுதாயமாக முடியும்.' எனவே, இந்த முயற்சியாளர்களின் பாதங்களை அல்லாஹ்  உறுதியாக்கி வைப்பானாக. இயக்க பேதங்களின்றி, கட்சிபேதங்களின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் எல்லோரும் ஒன்று படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக