புதன், 28 ஏப்ரல், 2010

நாம் எப்போது எழுச்சி பெறுவோம்?

ஒரு சமூகத்தின்  முன்னேற்றம், அபிவிருத்தி மற்றும் நாகரிக வளர்ச்சி போன்றவை அந்த சமுகத்தின் அறிவு, ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றிலேயே தங்கியிருக்கின்றன. இவை பற்றி எந்தக் கவனமும் செலுத்தப் படாமல் ஒரு சமூகம் இருக்குமென்றால், அந்தச் சமூகம் சீரழிவை நோக்கி மிக வேகமாக நடை பயிலுகிறது என்று அர்த்தம் கொள்ளலாம். கல்வியூட்டல், ஒழுக்கம் பேணல், வறுமை ஒழிப்பு என்பவற்றில் உயர்ந்து நின்ற சமுகங்கள் என்றுமே எழுச்சி பெற்று வாழ்ந்ததை நாம் வரலாறு நெடுகிலும் பல சந்தர்பங்களில் கண்டிருக்கிறோம்.

இலங்கையர், முஸ்லிம்கள் போன்ற சமூக அமைப்புக்குள் நாம் அடங்கி இருந்தாலும், கஹட்டோவிட்ட எனும் முஸ்லிம் கிராமத்தில் வாழும் ஒரு தனித்துவமான முஸ்லிம் சமுகம் என்ற வகையில், எம்மைச் சுற்றி வாழுகின்ற சகோதர சமூகங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, நாம் எவ்வளவு தூரம் எழுச்சி பெற்றிருக்கிறோம்? அவர்களை விட கல்வியால் நாம் எவ்வளவு தூரம் எழுச்சி பெற்றிருக்கிறோம்?! இதே போன்று ஒழுக்கம் மற்றும் பொருளாதார வளம் என்பவற்றில் நாம் எவ்வளவு எழுச்சி பெற்றிருக்கிறோம்?!! இவை பற்றி நாம் சிந்தித்தோமா? சிந்தித்தால்தானே வழி பிறக்கும்.

எமது கல்வித் துறையை நோக்கினால்................; எமக்கென்று தனித்துவமான பாடசாலைகள் இருக்கின்றன. ஒரு பாடசாலை நூற்றாண்டையும் கடந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், எம்மில் எத்தனை பேர் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தரணிகளாக அல்லது ஏனைய உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள்? கீர்த்தி மிக்க எமது ஆசான்களை விட்டுப் பார்த்தால், மொத்தத்தில், புத்தி ஜீவிகள் என்று சொல்லக்கூடிய எத்தனை மனிதர்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்? அப்படி ஒரு மட்டத்தை அடைந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் கூட தமது உயர் கல்வியை ஊருக்கு வெளியே சென்று கற்று வந்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்தத் தெரிவுகள், முயற்சிகள் என்பன கூட, எமது ஊரின் அபிவிருத்தி பற்றிய சிந்தனை கொண்ட ஒரு குழுவால் வழி நடத்தப் பட்டதன்றி, தனித்தனியாக சுயமாக செயல்பட்டு பெறப்பட்டவையே.

தொடரும்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக