வியாழன், 27 ஜனவரி, 2011

புவிக்கு இரண்டாவது சூரியன்? ஓரிரு வாரங்களுக்கு இரவும் பகலாகலாம்!

பூமிக்கு மற்றொரு சூரியன் சீக்கிரத்தில் உதிக்க இருப்பதாக இணையங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூரியன் குறைந்தது ஒரு வாரமாவது வானத்தில் பிரகாசிக்கும் என்று அவிஸ்திரேலியாவின் தென் குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியரான பிராட் காட்டர் கூறினார்.

திங்கள், 24 ஜனவரி, 2011

பாடசாலை ஆரம்பப் பிரிவும் நமது எதிர்காலமும்

ஒரு சில பெற்றோரின் உளக்குமுறல்

ஒரு பாடசாலையின் ஆரம்பப் பிரிவு என்பது, நீண்ட காலப் பாவனைக்கென அழகான முறையில் உறுதியாக நிர்மாணிக்கப்படுகின்ற ஒரு பாரிய கட்டடத்தை அமைக்க இடப்படுகின்ற அடித்தளத்தைப் ( FOUNDATION ) போன்றதாகும். அவ்வளவு முக்கியத்துவம் மிக்க அந்த அடித்தளத்தை எந்த விதமான தூர நோக்குமின்றி, அது தொடர்பான எந்தவொரு கவனக் குவிப்புமின்றி  பாடசாலை நிருவாகத்தினர் சும்மா ஒரு கண்துடைப்பு நோக்கில் அமைத்து வருவது, மிக மிக வேதனை தரக்கூடிய விடயம் மாத்திரமன்றி எதிர்காலப் பரம்பரை ஒன்றையே அதன் எழுச்சிப் பருவத்திலேயே குழி தோண்டிப் புதைத்து விடுகின்ற மாபாதகச் செயலுமாகும்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மாவீரன் நெப்போலியன் இஸ்லாத்தில் !?

அன்பான வாசகர்களே! இதில் நீங்கள் வாசிக்கப் போகும் நெப்போலியன் தொடர்பான - அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற - விடயம் உண்மயில்  வெறுமனே ஒரு கதையல்ல; மாற்றமாக ஒரு நிஜம்; இதுகாலவரை வெளியிடப்படாத ஒரு நிஜமான நிஜம். 2000ம் ஆண்டு இந்திய சஞ்சிகையான "சமரசத்தில்" வெளி வந்தது. இந்த வரலாற்று உண்மையை இதோ உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

சனி, 22 ஜனவரி, 2011

சட்டத்தின் முன்னே

அப்பாஸியப் பேரரசின் முதல் கலீபாவான அபுல் அப்பாஸ் அஸ்ஸப்பாஹ்வின் சகோதரர் அபூ ஜ ஃபர் அல்-மன்ஸூர் (இவரும் அப்பாஸியப் பேரரசின் கலீபாவாக இருந்தவர்) ஒரு சமயம் ஒரு பிரயாணத்தில் ஈடுபட்டார். இடையே ஓரிடத்தில் இரவு தங்கவேண்டி ஏற்பட்டது. எனவே அங்குள்ள விடுதியொன்றை அணுகினார்.

புதன், 19 ஜனவரி, 2011

மனிதனுக்கு வரைவிலக்கணம்?!

எந்தவொன்றுக்கும் வரைவிலக்கணம் கூறுவதில் கிரேக்கர்களை விட வல்லவர்கள் உலகில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கிரேக்கர்களில் சிலருக்கு ஒரு வருத்தம் இருந்தது.

வீதி விஸ்தரிப்புக்கு எதிரான பெட்டிசன் நிராகரிப்பு

கஹட்டோவிட்ட பிரதான வீதியின் விஸ்தரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'பெட்டிசன்' அதிகாரிகளால் நிராகரிக்கப் பட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.

அரபு நாடும் ஜாஹிலிய்யாக்காலமும்

# அரேபியாவின் புவியியல் அமைவு

அரபு நாடு ஆசியாக் கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இது அரபு மொழியில் "ஜஸீரதுல் அரப்"  - அரேபியத் தீவகற்பம் (Arabian Peninsula) என அழைக்கப்படுகிறது. அப்போதைய அதன் எல்லைகள் பின்வரும் வகையில் அமைந்திருந்தன.

சங்க இலக்கியத்தில் இருந்து தங்கமான ஒரு கருத்து

ஆணும் பெண்ணும் தங்கு தடையின்றிப் பழகுவதையும், ஆண்-பெண் தனித்திருப்பதையும் நாகரிகம் என்றும் நவீனம் என்றும் கருதிச் செயல்படுவதால் ஏற்படும் பல்வேறு வகையான விபரீதங்களை அன்றாடம் நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம்.

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 3

சுதந்திரம் என்பது என்ன?

எமது நாடான இலங்கை ஒரு காலத்தில் ஏகாதிபத்திய வாதிகளால், காலணித்துவ வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆளப்பட்டது. இராணுவ ரீதியான படையெடுப்பினூடாகத்தான் இந்த ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, 1948 இல் ' நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறோம்.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 2

சிந்தனா ரீதியான படையெடுப்பு!
இன்றைய முஸ்லிம் சமூகம், ஏக காலத்தில், பல்வேறுபட்ட படையெடுப்புகளுக்கு ஆளாகியுள்ளது. எமது முஸ்லிம் நாடுகள் பல, இராணுவ ரீதியான படையெடுப்புகளுக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளன. இந்தப் படையெடுப்பின் அவலங்களை, அவற்றின் மோசமான விளைவுகளை நாம் பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

திங்கள், 17 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 1

குர்ஆன் மத்ரஸாக்களும் நமது இளம் தலைமுறையும்
அல்லாஹ்வின் அருளால், வருடாந்தம், 200க்கும் அதிகமான மத்ரஸாக்களிலிருந்து மௌலவிமார்கள் பட்டம் பெற்று சமூகத்துக்குள் வருகிறார்கள். இவர்களது குர்ஆனிய அறிவு திருப்திகரமானதாக இருந்தாலும், இவர்களுடைய தொகை மிகச் சொற்பமானதாகும்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது. அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

நான் ரசித்த செவ்வி

வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்களில், நம் காலத்து ஜாம்பாவான் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களுடனான ஒரு அருமையான செவ்வியை இங்கு இணைக்கிறோம். இது எமது அபிமான அறிவிப்பாளரான அவருக்கு நம்மால் முடிந்த உபகாரம்.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!"

சனி, 8 ஜனவரி, 2011

பொது அறிவு - உயிரியல்

1. கடல் வாழ் உயிரினங்களில் மிகப் பெரியது : திமிங்கிலம்
2. மனிதனைப்போல நடக்கும் ஒரு பறவை: பெங்குவின்

பொது அறிவு - விண்வெளி

1. விண்வெளிப் பயணம் செய்யும் ஒருவருக்கு வான வெளி தோற்றமளிக்கும் நிறம்:  Orange Red.
2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர்: ராகேஷ் ஷர்மா

வெள்ளி, 7 ஜனவரி, 2011

ஊழிய உயர்வுக்கான ஐந்து வழிகள்

1. சம்பள உயர்வு பற்றி உங்கள் தொழில் தருனரிடமோ உயர் அதிகாரியிடமோ கேட்பதற்கு முன் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? எந்த வகையில் நீங்கள் உங்கள் தொழிலகத்துக்கு முக்கியமான நபர்? என்பதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். "இப்ப நாம இருக்கிற லெவல்ல சம்பளம் கொடுக்கறதே பெருசு.  உயர்வெல்லாம் டூ மச்..." என்று உங்களுக்கே தோன்றினால் சம்பள உயர்வுக் கோரிக்கையை விட்டு விடுங்கள். இல்ல....வாங்கும் சம்பளம் குறைவு என்று தோன்றினால் மட்டும் கேளுங்கள்.

ஓய்வு

இனிய நண்பனே!
உனக்கு ஓய்வெடுக்கத் தெரியுமா?

புதன், 5 ஜனவரி, 2011

கலவன் பாடசாலைகளுக்கு டாட்டா காட்டும் மேலை நாடுகள்!

ஆண்களும் பெண்களும் தனித்தனியாகக் கற்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியிருந்தும், அது தொடர்பிலான நம்பிக்கை குறைந்தோராய்,

கஹட்டோவிட்ட பிரதான வீதியின் நிலை?!

கஹட்டோவிட்ட பிரதான வீதியை அகலமாக்கிப் புனரமைக்கும் திட்டம், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டு, தற்போது,

சனி, 1 ஜனவரி, 2011

உமையாக்கள் (ஹிஜ்ரி 41 - 132)

                                                                                                                   ஆரம்பத்தில் கஃபாவைப் பரிபாலித்து வந்த நபி இஸ்மாஈல் (அலை) அவர்களின்  பரம்பரையில் தோன்றிய குசை இப்னு கிலாப் என்பவர் மக்காவில் முதன் முதலில் நகர அரசொன்றை