புதன், 1 செப்டம்பர், 2010

முல்லா கதை - 02

பெரியாவர் ஒருவர் முல்லாவை சந்தித்தார். " முல்லா, யாராக இருந்தாலும், நீ திறமையாகப் பொய் பேசி, அவர்களை ஏமற்றி விடுவாயாமே, இது உண்மையா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"ஆமாம், அது உண்மைதான்" என்று பதில் கூறினார் முல்லா.

அதற்கு அந்த முதியவர், " உன் திறமை என்னிடம் செல்லாது. எப்படி வேண்டுமானாலும் முயற்சி செய்து என்னை ஏமாற்று பார்ப்போம்" என்று சவால் விட்டார்.

உடனே முல்லா,"பெரியவரே! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க இப்போது எனக்கு நேரமில்லை. நம் ஊர் ஏரியில் உள்ள மொத்த நீரையும் வடித்து விட்டார்களாம். பெரிய, பெரிய மீன்கள் ஏராளமாகத் துள்ளுகிறதாம். அவற்றைப் பிடிக்க ஊர் மக்கள் எல்லாம் அங்கே சென்று விட்டார்கள். அவரவர் பிடிக்கின்ற மீன்களை அவரவரே எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு வேறு அறிவித்து விட்டார்கள். எனவே, நானும் அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன்" என்று பரபரப்புடன் கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் அந்தப் பெரியவர், "ஐயோ! இந்தச் செய்தி எனக்கு முன்னரே தெரியாமல் போய் விட்டதே. உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசி நேரத்தை வீணாக்கி விட்டேனே" என்று அலரி அடித்துக் கொண்டு ஏரியை நோக்கி ஓடினார். ஏரியில் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. யாரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கவுமில்லை.

'தாம் முல்லாவால் ஜோராக ஏமற்றப் பட்டுவிட்டோமே' என்பதை பெரியவர் அப்போதுதான் உணர்ந்தார்.

2 கருத்துகள்:

  1. மாசா அல்லாஹ் தொடங்கீட்டீங்க போல. வந்ததும் வராததுமாக முல்லாக் கதையில தொடங்கிட்டீங்களே.வேறேதாவது போட்டிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. வேறு புதிய செய்திகளுடந்தான் முல்லா கதைகளும் இணைந்துள்ளன. விபரமாக தேடிப் பார்த்தால் புரியும். நன்றி.

    பதிலளிநீக்கு