வியாழன், 23 செப்டம்பர், 2010

புலமைப் பரீட்சை முடிவுகள்: 179 புள்ளிகள் பெற்று அஷ்ஃபாக் சாதனை!

2010 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் இன்று (23.09.2010) வெளியாகியுள்ளன. இம்முறை, அல் பத்ரியா பாடசாலையில் 5 மாணவர்களும், பாலிகா பாடசாலையில் 6 மாணவிகளும், வெளிப் பாடசாலைகளில் கற்கும் 1 மாணவனுமாக மொத்தம் எமது ஊரைச் சேர்ந்த 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கஹட்டோவிட்ட மாணவர் ஒருவர் இம்முறை பெற்ற அதி கூடிய புள்ளி 179. இது கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் நிலையிலுள்ள புள்ளியாகும். திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலயில் கல்வி பயிலும் அஷ்ஃபாக் என்ற மாணவனால் பெறப்பட்ட இந்த பெறுபேறு, கஹட்டோவிட்ட வரலாற்றில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளியாகும்.

அல் பத்ரியா பாடசாலையில் தானிஷ் (164) என்ற மாணவனும், பாலிகா பாடசாலையில் இஷ்கா (171) என்ற மாணவியும் தத்தமது பாடசாலை சார்பாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதே வேளை, அகில இலங்கை ரீதியில் அதி கூடிய புள்ளியாக, சிங்கள மொழியில் 196 உம், தமிழ் மொழியில் 193 உம் பெறப்பட்டுள்ளன. பரீட்சையில் சித்தி பெறுவதற்கு, மேல் மாகாணத்தில் இம்முறை நிர்ணயிக்கப்பட்ட அதி குறைந்த புள்ளி 145 ஆகும். 

2 கருத்துகள்:

  1. இது கஹட்டோவிட இணையமா? அல்லது பாலிகாவின் இணையத்தளமா?

    பதிலளிநீக்கு
  2. தயவு செய்து இறைச்சிக் கடையிலிருந்து மரக்கறிக் கடைப் பக்கமாக மாறவும். புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..........!

    பதிலளிநீக்கு