இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை அகதிகளாக்கிய பகிஸ்தான் வெள்ளத்தை மறந்திருக்க மாட்டீர்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று 03.09.2010 இல் பாகிஸ்தான் பயணமாகவுள்ளது. அரச அங்கீகாரத்துடன் செல்லவுள்ள இக்குழுவில், எமது ஊரைச் சேர்ந்த யூனானி வைத்தியரான M.S.M. பாயிக் (BUMS) அவர்களும் அங்கம் வகிக்கிறார்.
அல்லலுறும் எமது சகோதரர்களின் துயர் துடைப்பதில் எமது ஊரை பிரதிநிதிப்படுத்தும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்!
அல்லலுறும் எமது சகோதரர்களின் துயர் துடைப்பதில் எமது ஊரை பிரதிநிதிப்படுத்தும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்!
இந்த மைந்தனை ஊரின் மைந்தன் என்று புகழ்பாடியிருக்கிறீர்கள். இந்த மைந்நதனால் ஊருக்கு என்ன நடந்துள்ளது?
பதிலளிநீக்குமண்ணின் மைந்தன் பற்றி வந்த செய்தியைப் படித்தவுடன், அவர் மண்ணுக்குச் செய்த சேவைகளில் சிலவற்றை பட்டியலிட்டுக் காட்ட வேண்டுமென இந்த வாசகனின் உள்ளத்தில் கருக்கொண்ட சில விடயங்களில் ஒரு சில விடயங்களை மாத்திரம் தொட்டுக் காட்டுவது பொருத்தமென நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஉதாரணமாக, ஒரு காலத்தில் எமது பத்ரியாவில், பொதுவாக ஆசிரியர் தட்டுப்பாடு (குறிப்பாக அதிலும் கணித விஞ்ஞான பாடங்களுக்கு) நிலவிய போது, பெடரேஷன் என்ற நிறுவனம் திடீரெனத் தோன்றி, கல்வித்துறையில் நாம் அதல பாதாளத்தில் வீழ்ந்து நொறுங்க இருந்த சந்தர்ப்பத்தில், எம்மை எல்லாம் கட்டிக் காத்த அந்த நிறுவனத்தின் ஓர் அங்கத்தவராக இருந்து, விஞ்ஞான பாடத்துக்கு ஆற்றிய அந்த மகத்தான பணியை, பங்களிப்பை, சேவையை எந்த இடத்தில் வைத்து நோக்குவது?
விமர்சனம் என்பது, காய்த்தல் உவத்தல் இன்றி தகவல்களை சரியாக, அதன் ஆழ அகலங்களோடு அறிந்து, இங்கிதமாகவும் ஆரோக்கியமாகவும் ஒரு விடயத்தை முன் வைப்பதாகும். இந்த டாக்டர் பாயிக்கிடம் விஞ்ஞானம் பயின்ற என்னைப் போன்ற எத்தனையோ மாணவர்கள், இன்று அதே துறையில் பல்வேறு நிலைகளில் பிரகாசித்திருப்பதையும் அவரது மற்றுமொரு பங்களிப்பாக குறிப்பிடலாம்.
மேல் படிப்பை பெற்றுக் கொள்ள முடியாத ஓரிரு வறிய மாணவர்களுக்கு, எமதூரிலுள்ள கருமித்தனம் இல்லாத நல்ல உள்ளம் படைத்த சிலர் பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து வருகின்றனர். அத்தகைய நல்ல உள்ளம் படைத்தவர்களுள் இந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பவரும் ஒருவராக இருப்பதை அறிந்து நான் வியந்து போனேன். ஏனென்றால், மேற்படி விமர்சனத்துக்குப் பிறகுதான் டாக்டர் பாயிக், இந்த மண்ணின் மற்றுமொரு மைந்தனுக்கு செய்து வரும், மற்றுமொரு மகத்தான பணி பற்றி அறிய முடிந்தது.
"நீங்கள் நினைப்பவைகளில் அதிகமானவை பாவமானவையே" (குர்ஆன்)
டியர் முஹிப்புல் ஹக்....
பதிலளிநீக்குசெய்த சேவைகளை சொல்லிக் காட்டி பெருமை அடிப்பதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. இதே சேவையை இந்த ஊரில் மற்றவர்கள் செய்துள்ளனர். அவாகளுடன் இவரின் சேவையை ஒப்பிட்டு பார்த்தால்.... அதை நான் விளங்கப்படுத்தத் தேவையில்லை. அவரின் பெயரையும் நான் இங்கு கூறி அவருக்கும் இவ்வுலகில் புகழைத் தேடிக் கொடுத்து மறுமையில் கிடைக்கும் நண்மையை இழக்கச் செய்யவில்லை. இந்த ஊரில் கல்வி கற்கும் பலருக்கு பலபேர் பணம் கொடுத்து மகத்தான பணிகள் செய்கின்றன.
இணையத்தளத்தில் சகோதரப் பாசம் பொங்கி வழியுது...!
oh it is too much..! please do not bring your personal dispute in to public. Dear Blog editor don't publish this type of indecent comments. May Allah forgive us all...!
பதிலளிநீக்குஊரின் மானத்தை net இலும் ஏற்றிய நன்பர்களுக்கு,,,,,ஷ்
பதிலளிநீக்குபாவம் அந்த ஜீவன்.........
அந்த தம்பி இனியாவது வாழட்டும்
ஊரான்.