வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தொழுகையில் 200 க்கு மேற்பட்ட கருத்து வேறுபடும் மஸ்அலாக்கள்

தொழுகையில், தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அசைவுகளின் போது, சுமார் 200 க்கு மேற்பட்ட, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய மஸ்அலாக்கள் இருப்பதாக மௌலவி முர்ஷித் முப்தி கூறினார். இன்று, 10.09.2010, நூர் பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் குத்பாவிலேயே இந்த கருத்து முன் வைக்கப்பட்டது.
மௌலவி முர்ஷித் தமது உரையில், மூன்று முக்கியமான கருத்துக்களை மக்கள் முன் வைத்தார்.
  1. ஒவ்வொரு முஸ்லிமாலும், நோன்பு காலத்தில் முக்கியத்துவம் கொடுத்து செய்யப்பட்ட அமல்கள், நோன்பு முடிந்த பின்பும் அவ்வாறே தொடர வேண்டும். இதனைத்தான் அல்லாஹ் விரும்புகிறான். ஒருவனது நோன்புடைய கிரியைகள் கபூல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கு இது பிரதான அடையாளமாகும். யாருடைய அமல்கள் நோன்பு காலத்துடன் நின்று விடுகிறதோ, அவரது நோன்பு கால அமல்கள் அல்லாஹ்விடத்தில் மதிப்புப் பெறவில்லை என்பதை இதிலிருந்து புரியலாம்.
  2.  வெள்ளிக் கிழமை நாட்களில் பெருநாள் வந்தால், பெருநாள் குத்பாவும் ஜும்ஆ குத்பாவும் பள்ளிவாசலில் கட்டாயம் நடத்தப் படவேண்டும். ஆனால், ஏதாவது  ஒரு குத்பாவில் கலந்து கொள்ளாமலிருக்க சிலர் அனுமதிக்கப்பட முடியும். பெருநாளுடைய தினத்தின் முக்கிய அமல்களுல் ஒன்றுதான் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்வது. பள்ளிவாசலுக்கு அதிக தூரத்தின் காரணமாக, இரண்டு குத்பாக்களிலும் கலந்து கொள்வதால், யாருக்கு மேற்சொன்ன அமல் விடுபடுகிறதோ, அவருக்கே இந்த அனுமதி வழங்கப்பட முடியும்.
  3. ஒரு யுத்தத்தை விட பித்னா கொடுமையானது. இந்த பித்னாவுக்கு வழி வகுப்பதுதான் கருத்து வேறுபாடுகளின் போது விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது. தொழுகையில், தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அசைவுகளின் போது, சுமார் 200 க்கு மேற்பட்ட, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய மஸ்அலாக்கள் இருக்கின்றன. இமாம்கள் யாரும் இவற்றை வைத்து சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, இது இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையைக் காட்டுவதாகவே எடுத்துக் கொண்டார்கள்.
 காலை 8:25 மணியளவில் ஆரம்பித்த குத்பா 9:00 மணியளவில் நிறைவு பெற்றது.

1 கருத்து:

  1. معجم الكبير للطبراني – (ج 11 ص 342)02
    782- حَدَّثَنَا مَسْعُودُ بن مُحَمَّدٍ الرَّمْلِيُّ ، حَدَّثَنَا عِمْرَانُ بن هَارُونَ ، نا مَسْلَمَةُ بن عُلَيٍّ ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحِمْصِيُّ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ ، لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ نَافِعٍ ، إلا أَبُو عَبْدِ اللَّهِ الْحِمْصِيُّ ، تَفَرَّدَ بِهِ مَسْلَمَةُ بن عُلَيٍّ

    02. யார் ரமழான் நோன்பைநோற்று அதனைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்களிலும் நோன்பு நோற்கிறாறோஅவர் தனது பாவங்களிலிருந்து நீங்கி அவரை அவரது தாய் பெற்றிருந்த நாளில் இருந்ததைப்போன்று ஆகிவிடுவார்.” முஃஜமுல் கபீர் – 782.

    இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் மஸ்லமா இப்னு உலை நிராகரிக்கப்பட்டவர் என்பதால் இச்செய்தி பலஹீனமானதாகும்.

    பதிலளிநீக்கு