வியாழன், 30 செப்டம்பர், 2010

A/L விஞ்ஞானப் பிரிவு: நம்மால் முடியாதா?..!

அல் பத்ரியாவில், இவ்வருட புதிய A/L வகுப்பில், மிகவும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாக சில மாணவியர் கதைத்துக்கொண்டு சென்றனர். கடந்த வருட  O/L பரீட்சையில், பத்ரியாவிலிருந்து அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தாலும் சித்தியடைந்த மாணவர்களுள் பெரும்பாலானோர் விஞ்ஞானத்துறையில் பயில்வதற்காக வெளிப் பாடசாலைகளுக்கு சென்றிருப்பதே இதற்குக் காரணம் என அந்த மாணவியர் மேலும் சில தகவல்களையும் கதைத்துச் சென்றனர்.

விஞ்ஞானப் பிரிவில் கற்க எமது மாணவர்கள் செல்வது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக இருந்தாலும், காலப் போக்கில், குறைந்த மாணவர் தொகை காரணமாக, 'தற்போது எமது பாடசாலையில் நடைபெற்று வரும்  A/L கலைப் பிரிவு வகுப்புக்களும் கூட இல்லாமல் போய் விடுமோ?' என்ற ஒரு நிலையை இது தோற்றுவிக்கும். எனவே, எமது பாடசாலையில் கற்ற கணிசமான திறமையுள்ள மாணவர்கள், அதிலும் மாணவிகள், வெளியே செல்லாமல், எமது பாடசாலையிலேயே விஞ்ஞானப் பிரிவில் கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க முடியாதா? எத்தனையோ பாடசாலைகள் புதிய திட்டங்களை வகுத்து, இவ்வாறான விஞ்ஞானப் பிரிவுகளை நடாத்திச் செல்லும் போது, எமது மாணவர்களைக் கொண்டு எமது பாடசாலையில் ஏன் நாமும் தொடங்க முடியாது?

இது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் மாத்திரம் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியமல்ல. மாறாக, ஊர் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடக்க வேண்டிய ஒரு விடயமாகும். எமது பாடசாலையைத் தரமுயர்த்த வெளியூரார் வரப்போவதில்லை. ஊர் மக்களாகிய எமது முயற்சியில்தான் எமது வெற்றியும் முன்னேற்றமும் தங்கியிருக்கின்றன.

"நீங்கள் முயற்சி செய்யாதவரை உங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை!" இது குர்ஆனின் கூற்று.

4 கருத்துகள்:

  1. இதற்குத்தான் சொன்னார்கள் பாலிகாவையும் பத்ரியாவையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து மாணவா்தொகையை அதிகரித்து ஒரு விஞ்ஞானப் பிரிவைப் பெறலாம் என்று. எங்கே விட்டார்களா...?

    பதிலளிநீக்கு
  2. கீழ் வகுப்பு மாணவர்கள் தொகையைக் காட்டித்தான் உ/த விஞ்ஞானப் பிரிவைப் பெற வேண்டுமா? 650 இற்கும் குறைவான மாணவர்களை மாத்திரம் கொண்டு விஞ்ஞானப் பிரிவு நடாத்தும் பாடசாலைகளும் இருக்கும் போது பத்ரியாவுக்கு மட்டும் என்ன குறைச்சல்? தம்மால் ஒரு வேலையைச் செய்ய முடியாத போது, இப்படித்தான் நொண்டிச் சாட்டுகளை அள்ளி வைப்பார்கள்.

    பத்ரியாவுக்கு விஞ்ஞானப் பிரிவு அவசியம் என்பது எனதும் அபிப்பிராயம். பத்ரியாவுக்கு விஞ்ஞானப் பிரிவு வருவதில் என்னால் இயன்ற அனைத்தையும் செய்ய நானும் தயாராக இருக்கிறேன். ஊரான் என்ற வகையில் !

    பதிலளிநீக்கு
  3. ஊரானுக்குச் சொந்தக்காரன்1 அக்டோபர், 2010 அன்று AM 11:32

    சொந்தப் பெயரை வெளியிட முடியாத கோழை ஊரான் என்று மற்றவர்களின் புனைப்பெயரை திருடியிருக்கிறான். திலுட்டு நாய்… எப்;பதான் இந்த திருட்டுப் புத்தி போகுமோ தெரியாது….. கணிணியில் திருட்டு….

    பதிலளிநீக்கு
  4. தயவு செய்து நல்ல வார்த்தைகளை பயன்படுத்தவும்

    பதிலளிநீக்கு