எமது ஊரின் பிரதான வீதியை அகலமாக்கி புனரமைப்பதற்கான ஒரு முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை என்பன பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. எமது பிரதான வீதியை சுமார் 30 அடி வரை அகலமாக்குவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள வீடுகள், கடைகள் மற்றும் காணிகளிலிருந்து தேவையான அளவு இந்தப்பணிக்காக பெறப்பட இருக்கிறது.
வீதி அகலமாக்கும் பணிக்கு ஆதரவு தெரிவித்து, எமது பிரதான வீதிக்கு அருகில் வசிக்கும் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் தமது கையொப்பங்களை வழங்கியுள்ளனர். அதே நேரம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர், கையொப்பமிட சற்று தயக்கம் காட்டுவதாகவும் தெரிய வருகிறது.
இது எமது ஊர்; எமது பிரதான வீதி. காலத்துக்கு ஏற்றதாக இருந்தால்தான் ஊரை அபிவிருத்தி அடையச்செய்யலாம்.
அப்போதுதான் எமது வாழ்க்கைத்தரமும் உயரும். எனவே ஊரின் முன்னேற்றம் கருதி தியாகங்கள் செய்யப்பட வேண்டும். அத்துடன் இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தியாகங்கள் அனைத்தும் 'ஸதகதுல் ஜாரிய்யா' வுமாகும்.
“ஒன்றும் ஒன்றும் நீங்கள் நினைத்ததாக இருக்கலாம்” – உஸ்தாத் அகார்
பதிலளிநீக்குஇந்த வீடீயோ கிளிப்பைப் பார்த்தவுடன் பெறும் ஆச்சரியமாக இருந்தது. பலவிதமான உலக அறிவுகளுடனும் தூர நோக்குகளுடனும் செயல்படுவதாக தன்னைக் கருதிக்கொள்ளும் இயக்கங்களில் ஒன்றான ஜமாஅதே இஸ்லாமியின் மிக முக்கியமான மார்க்க அறிஞர்களில் ஒருவரான உஸ்தாத் அகார் அவர்கள் அடிப்படைக் கணித அறிவின்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு மஸ்அலாவை அலட்சியப்படுத்தப்போய் கணிதத்தையும் அலட்சியப்படுத்துகிறார். எஞ்சியவைகளை வாசகர்கள் இயக்க வேறுபாடின்றிப் புரிந்துகொள்வார்கள் இன்சா அல்லாஹ்.
http://www.youtube.com/watch?v=bYcZ-MSSIa0&feature=player_embedded