கவியுள்ளங்களின் தரிசனத்துக்காக,
வைரமுத்துவின் வீட்டுச் சமையல்.......
எமது சமூகம் விஞ்ஞானக் கல்வித் துறையில் எந்தளவு முயற்சி செய்கிறது?, எந்தளவு வெற்றி பெறுகிறது? என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவில் இதனை வெளியிடுகிறோம். இது எமது சமூகத்தை கல்வித் துறையில் முன்னேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும் ஒரு குழுவுக்குக் கிடைத்த வெற்றி. முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமிழந்துள்ள எமது சமூகத்தை மீண்டும் தலை நிமிர வைக்க வேண்டுமானால், அதற்கான சிறந்த முதலீடு கல்விதான். ஏனெனில், கல்விச் செல்வத்தை யாராலும் சூறையாட முடியாது! |
9/11 இல் 'குர்ஆன் எரிப்பை' கைவிட்டமைக்காக, நியூ ஜர்ஸியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர், சர்ச்சைக்குரிய ப்ளோரிடா தேவாலய மதகுருவான டெர்ரி ஜோன்ஸுக்கு பெறுமதியான நவீன காரொன்றை பரிசாக வழங்க முன்வந்துள்ளார். 'குர் ஆன் எரிப்புப் போராட்டத்தை'க் கைவிட்டால், தான் ஒரு காரை ஜோன்ஸுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிக்கு ஏற்பவே பிரட் பென்சன் எனும் கார் விற்பனையாளர் இந்த ஏற்பாட்டை செய்து வருகிறார்.
பல பரோபகாரிகளின் உதவியுடன், வீடற்ற ஒருவருக்கு, சிறிய வீடொன்றைக் கட்டிக்கொடுத்து MUSLIM LADIES STUDY CIRCLE சாதனை படைத்துள்ளது. 11x16 அளவிலான இந்த வீடு இன்று மாலை உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வெள்ள நிவாரண உதவிக்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று, கடந்த 05.09.2010 இல் பாகிஸ்தான் பயணமான ஐந்து பேர்களடங்கிய வைத்தியக் குழு நேற்று முன் தினம் நாடு திரும்பியது. இரவு சுமார் 10:30 மணியளவில் கட்டுனாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தக் குழுவில், எமது மண்ணின் மைந்தர்களுள் ஒருவரான டொக்டர் பாயிக்கும் ஒருவர். விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அழைத்துச் சென்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் துயர்மிகு நிலைமைகளை நேரடியாகக் கண்டவர்கள் இவர்கள். பாகிஸ்தான் மக்களின் நிலவரம் பற்றி இவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அனைவரும் ஏகோபித்து சொன்ன விடயம், "சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடின்றி பசியாலும் நோய்களாலும் கண் முன்னாலேயே மக்கள் இறக்கிறார்கள். நாம் அங்கு போய் அவர்களுக்கு செய்த சேவை மிக மிகச் சொற்பமே. அவர்களுக்காக நம் நாட்டு முஸ்லிமகள் அனைவருமே உதவ முன்வர வேண்டும். எமது உலகளாவிய சகோதரத்துவத்தைக் காட்ட இதைத் தவிர வேறு சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும்" என்பதுதான். ![]() |