சனி, 31 டிசம்பர், 2011

சமூகப் புணரமைப்பு: இரு குறிப்புக்கள்

பாலிகா அதிபருக்கு மாற்றம்.

கஹட்டோவிட்ட பாலிகா பாடசாலையின் அதிபர் ஜனாப் புஹாரி உடயார் அவர்கள் உடனடியாக மாற்றம் பெற்றுச் செல்வதாக நேற்று (30.12.2011) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

திங்கள், 26 டிசம்பர், 2011

K.P. கோத்திரத்தின் ஒன்றுகூடல்

எமது கிராமத்தின் மதிப்பு மிக்க கோத்திரமான K.P. கோத்திரம், அதன் நான்கு தலைமுறையினரையும் கூட்டி, 25.12.2011 ஞாயிரன்று ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தது. பரந்தும் பிரிந்தும் செல்லும் குடும்பங்களை ஈர்த்து, ஒன்றிணைக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்த கோத்திரத்தின் 38 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். K.P. கோத்திரத்தின் முதலாவது தலைமுறை உறுப்பினர்களான, K.P. ரவூப் அவர்களின் பிள்ளைகளும் மருமக்களும் பிரதம அதிதிகளாக இங்கு கௌரவிக்கப் பட்டனர்.

சனி, 24 டிசம்பர், 2011

அல் அக்ஸா தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள்

* கி.பி. 636   இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களால் ஜெரூஸலம் கைப்பற்றப்படுதல் மற்றும் அவர்களுடைய மஸ்ஜித் கட்டப்படுதல்

* கி.பி. 685 உமையா கலீபா

வியாழன், 22 டிசம்பர், 2011

'பாலிகா'வுக்குக் கிடைத்த அரச உதவிகள் நழுவிச் செல்லவில்லை....

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா பாடசாலையில் கட்டப்பட்டு வருகின்ற மலசல கூடங்கள், கட்டுமானப் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளன.

இதன் பணிகளை

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கண்மூடித்தனமான பின்பற்றல்.....

ஒரு தாயும் ஒரு மகளும் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 'சொஸேஜஸை' கழுவி சுத்தப்படுத்திய தாய், அதனை சமைக்கும் பாத்திரத்தினுள் இடும் போது, இரு நுனிகளையும் வெட்டி விட்டாள்.

மகள் கேட்டாள்

சனி, 17 டிசம்பர், 2011

பிரஷர், உப்பு, பொட்டாசியம்


'பிரஷரா?

 உணவில் உப்பைக் குறை.'

 ஆம் பிரஷருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?

உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na)

கல்லறை வாசகங்கள்


ஒரு கல்லூரிப் பட்டமளிப்பு விழாவின்போது வைரமுத்து உதிர்த்த வைர வரிகள் சிலதை இதோ உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:

"இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சிரிப்பு (கவிஞர் வைரமுத்து)


(எங்கே னண்பர்களே நீங்களும் ஒரு முறை சிரித்துத்தான் பாருங்களேன்!)

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

(இந்த ஹைக்கூ எப்படியென்று பாருங்கள்!)

தன் பசியைத் தணிக்க
பிறன் பசியைத் தீர்ப்பவள்
விபச்சாரி!

ஸீராவைக் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு) கற்பதன் அவசியம் - (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.

 நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர்

வியாழன், 15 டிசம்பர், 2011

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி


(இஸ்லாம் / இஸ்லாமிய நாகரிகம் - உயர் தரம்)


 அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்கஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர்
குர்ஆனின் மொழியாகப் பரிணமித்துஇஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது.
இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடுஅதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவேவழக்கிலிருந்த மொழிகளில் அதன் செல்வாக்கைப் பதித்தது.

முஸ்லிம்களால் பாரசீகம் கைப்பற்றப்பட்டபோது

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

9A சித்தி பெற்ற 9 மாணவர்களுக்கு இலவச உம்றா யாத்திரை!

கடந்த 2010 ஆம் வருட ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு இலவசமாக புனித உம்றா யாத்திரைக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியும் மனிதர்கள்!

எனது வீட்டுக்கு அருகில் பராமரிக்கப்படாத ஒரு காணி உண்டு. இதன் வேலிக்கு நடப்பட்டிருந்த இரண்டு பஞ்சு மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அத்துடன் இவற்றின் கிளைகள், எனது வீட்டுக் கூரைக்கு மேலாக படர்ந்து, எந்த நேரம் வீட்டைப் பதம் பார்த்து விடுமோ என அஞ்சுமளவுக்கு கிளைகளைப் பரப்பியிருந்தன. போதாக் குறைக்கு, ஒரு மரத்தின் தண்டின் அடிப்பாகம் உக்கியும் போயிருந்தது.

இந்த நிலையில்,

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கவலைக்கிடமான நிலையில் அத்தனகல்ல தொகுதி முஸ்லிம்களின் கல்வி நிலை!

கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகள், ஏனைய சிங்கள பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது, கல்வித் துறையில் மிகவும் பின்தங்கி அதல பாதாளத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

எமது ஊரா இது....? வெட்கக் கேடு...!

பாதுகாப்பு அமைச்சின் குற்றத்தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, கஹட்டோவிட்ட மக்கள், தங்களது ஒத்துழைப்பை வழங்குவதில் கரிசனை இல்லாமல் இருப்பதாக நிட்டம்புவ பொலீஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 24 அக்டோபர், 2011

Gaddafi's Last Will, We Chose Confrontation As A Badge Of Honour


 "This is my will. I, Muammar bin Mohammad bin Abdussalam bin Humayd bin Abu Manyar bin Humayd bin Nayil al Fuhsi Gaddafi, do swear that there is no other God but Allah and that Mohammad is God's Prophet, peace be upon him. I pledge that I will die as a Muslim.

திங்கள், 10 அக்டோபர், 2011


புள்ளித் திட்டம் 2011 (இஸ்லாமிய நாகரிகம்) புதிய பாடத் திட்டம்

by Boosary Sallih on Saturday, October 8, 2011 at 9:55pm
பத்திரம் 47 / T / 1

 01) 2 02) 3 03) 4 04) 1 05) 5 06) 1 07) 3 08) 1 09) 3 10) 1

 11) 4 12) 5 13) 2 14) 4 15) 1 16) 1 17) 2 18) 1 19) 5 20) 5

 21) 5 22) 3 23) 3 24) 1 25) 5 28) 1 27) 5 28) 4 29) 2 30) 2

 31) 1 32) 1 33) 3 34) 1 35) 3 36) 2 37) 2 38) 1 39) 3 40) 4

 41) 2 42) 1 43) 2 44) 2 45) 2 46) 1 47) 4 48) 4 49) 1 50) 4

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சர்வதேச சிறுவர் தினம்


ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் என 1979 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .அன்றிலிருந்து இன்றுவரை அன்றைய நாள் சர்வதேச சிறுவர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .
அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் நாடளாவிய ரீதியில் எமது சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்கும்  துன்பங்களுக்கும்  உள்ளாக்கப்பட்டுகிறார்கள்.சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் ,அவர்களை வேலைக்கு அமர்த்தல் ,சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுத்தல் என பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் எமது குழந்தைகளை வீட்டினில் இருந்தவாறே நாம் துஷ்பிரயோகம் செய்வதுதான் இன்றைய காலத்தில் மிகவும் துன்பமான விடயமாக காணப்படுகிறது .ஒவ்வொரு பெற்றோரும்  அங்கே போகாதே , இங்கே போகாதே ,அவன் கூட சேர்ந்துதான் நீ கெட்டு போய் விட்டாய் என்று கூறி வீட்டினில் இருத்தி தொலைக்காட்சி முன் அமர்த்தி தமது குழந்தைகளை தாமே துஸ்பிரயோகம் செய்கின்றனர் .இவ்வாறு பெற்றோர்களை கூட ஏமாற்றும் தந்திரோபாயம் சிகரட் கம்பனிகளுக்கு நன்றாக  தெரிந்துள்ளது .  
அம்மாவை கேட்டால் என் மகன் திரைப்படம் பார்ப்பதில்லை காட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் என்று கூறுவார்.அது மட்டும் அல்லாது  அவர் குழந்தை காட்டூன் வடிவமாக தன்னை வடிவமைத்து  விளையாட தாய் அதை பார்த்து ரசிப்பார்  .சிறுவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் பார்த்து ரசிக்க அழகுதான் ஆனாலும் காட்டூன் கதாபாத்திரங்களை விலை கொடுத்து வாங்கும் சிகரட் கம்பனிகள் அதன் மூலமாக  தமது  எண்ணங்களை விரைவாகவே குழந்தைகள் மத்தியில் விதைத்து  விடுகிறார்கள் .சிறுவயதில்  இருந்தே குழந்தைகளை ஏமாற்ற  ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த உண்மை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலகுவில் புரிந்து விடுவதில்லை.காட்டூன்  இல் தோன்றும் கதாபாத்திரங்களை பார்த்து ரசிக்கும் சிறுவன் அதன்  செயற்பாடுகளை  தானும் விரும்பி செய்யும் போது சில காலங்களின் பிற்பாடு அவன் அந்த செயற்பாடுகளையே விரும்பி ஏற்ப்பவன் ஆகிறான் .
இந்த உண்மைகள் தெரிந்த சிகரட் கம்பனிகள் காட்டூன் கதாபாத்திரங்களை மட்டும் அல்லாது திரைப்பட நடிகர்களை கூட விலை கொடுத்து வாங்கி  திரைப்படங்கள் மூலமும் திரைப்பட பாடல்கள் மூலமும் தமது விளம்பரங்களை  கவர்ச்சிகரமாக காட்டி சிறுவர்களை ஏமாற்றும் வித்தையை முன்னெடுத்து செல்கிறார்கள் .

புதன், 21 செப்டம்பர், 2011

ஆங்கில தினப் போட்டிகளில் பாலிகாவுக்கு 12 வெற்றிகள்

அத்தனகல்ல தொகுதி பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டிகளில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்  7 முதலாம் இடங்கள் உட்பட 12 வெற்றிகளைப் பெற்று மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளது. தமிழ் மொழி மூல மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகள், கடந்த செப்டம்பர் 15, 16 ஆம் திகதிகளில் வியாங்கொட ஜனாதிபதி வித்தியாலயத்தில் இடம் பெற்றன.

இதன் போது, உடுகொட அரஃபா பாடசாலை மற்றும் ORCHARDWATTA முஸ்லிம் பாடசாலை என்பனவும் பல நிலைகளை வென்று, முஸ்லிம் சமுகம் ஆங்கில அறிவில் சளைக்கவில்லை என்பதை எமது பிரதேசத்துக்கு தெளிவு படுத்தியிருந்ததன.

பாலிகா மாணவிகள் பெற்ற முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

முதலாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A       A.F. Eshqa               Dictation              Gr. 06
CATEGORY-A       M.S.F. Zameera       Dictation              Gr. 09
CATEGORY-A       S.H.F. Husna           Dictation               Gr. 10
CATEGORY-A       A.F. Eshqa              Creative Writing    Gr. 06
CATEGORY-A       M.A. Zainab            Creative Writing    Gr. 09
CATEGORY-A       A.K.F. Miduha        Creative Writing    Gr. 10
CATEGORY-A       M.F. Humaida         Recitation              Gr. 05

இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A       M.S.F. Shifka         Recitation             Gr. 04
CATEGORY-A       S.H.F. Husna          Recitation             Gr. 10
CATEGORY-A       M.R. Bashahir        Copy Writing        Gr. 03

மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள்
CATEGORY-A      M.F.F. Fasra         Recitation               Gr. 06
CATEGORY-A      M.I.F. Ifasa           Copy Writing          Gr. 04


      

சனி, 17 செப்டம்பர், 2011

இது ஆக்கமா? அழிவா?

'ஃபேஸ் புக்' இல் தொடர்ந்து செல்கின்ற ஒரு கருத்தாடலை இங்கு தருகிறோம்.

இது விவாதமா? பிடிவாதமா? வாதமா? தர்க்கமா? குதர்க்கமா?...................

நம்மைப் பொருத்தவரை, 'எமது சகோதரர்கள் மத்தியில் ஏன் ஒற்றுமை ஏற்படுவதில்லை?' என்ற எமது வினாவுக்குக் கிடைத்த ஒரு பதிலாகவே இதனைக் கருதுகிறோம். பகிரங்கமாகவே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் இவ்வாறான கருத்தாடல்களினால் ஒற்றுமைக்குப் பதிலாக பிரிவினையே தோன்றும். "உங்கள் கைகளாலேயே நீங்கள் தேடிக்கொண்ட வினை......." என்று இறைவன் கூறுவது இதைத்தானோ....?!

இனி, கீழே வாசியுங்கள்......

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன. பரீட்சை நடைபெற்று ஒரு மாதத்துக்கு முன்னரே பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்த பரீட்சை ஆணையாளர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

 எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

அதி கூடிய புள்ளியாக அல் பத்ரியாவில் ஒரு மாணவன் 166 உம், பாலிகாவில் இரு மாணவிகள் 180 உம் பெற்றுள்ளனர். அகில இலங்கை மட்டத்தில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளி 195. இந்த அதி கூடிய புள்ளியைப் பெற்ற மூவருள் ஒருவர் முஸ்லிம் சமூகத்தை பிரதி நிதித்துவப் படுத்துவது எமக்கு மற்றொரு மகிழ்ச்சி.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

எமது ஈ மெயிலுக்கு வந்திருந்த ஒரு ஆக்கத்தை இங்கு தருகிறோம்

தொழுவிப்பதற்கு என்ன QUALIFICATION?

பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துபவர்களுக்கு இருக்க வேண்டிய qualification என்ன என்பது வரையறை செய்யப்படாததால் உள்ள நடைமுறைச் சிக்கலை உதாரணமொன்றின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இமாம்களாகப் பணி புரிபவர்கள் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கும் சந்தர்ப்பங்களில், அவர்கள் விடுமுறைக்காக சென்று வரும் வரையில் யார் யாரோவெல்லாம் தொழுகை நடாத்துகின்ற நிலை எமதூரில் உள்ளது. பல வேளைகளில், குர்ஆனை தப்பு தப்பாக ஓதக் கூடியவர்கள் கூட தொழுகை நடத்துகிறார்கள். இவர்களின் பின்னால் குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த பலர், அதிலும் மௌலவிமார்கள் கூட, மஃமூம்களாகத் தொழ வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

"உங்களில் குர்ஆனை நன்றாக ஓதக் கூடியவரை தொழுகைக்கு இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்" என்று தெளிவான கட்டளைகள் இருக்கும் போது, இந்த நிலை ஏன் இன்னும் தொடர்கிறது? ஏன், எமதூரில் ஒழுங்காக ஓதக் கூடியவர்கள் இல்லையா? அல்லது, ஓதக் கூடியவர்கள் ஜுப்பா அணியவில்லை என்பதனாலா? அப்படியும் இல்லையென்றால், 'எங்களுக்குத் தேவையானோரைத்தான் நாம் தெரிவு செய்வோம்' என்று நிருவாகிகள் இறுமாப்புடன் செயல் படுகிறார்களா?

பள்ளிவாசல் அல்லாஹ்வின் இல்லம். தொழுகை அவனுக்காக. மேலே சொன்ன கட்டளை கூட அவனது வழி காட்டலே. அப்படியிருக்க, தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக ஒரு பிரதான அமலை நாம் அலட்சியப் படுத்தலாமா?

ஊரான்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ரமழானுக்குப் பின்னரும் இபாதத்துக்களைத் தொடர சில வழிமுறைகள்

1. நேர்வழியில் நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்ள
     வேண்டும்.
    "எங்கள் இறைவா! நீ நேர்வழி காட்டியதன் பின்னர் எமது உள்ளத்தைப் பிறழச்
     செய்து விடாதே; எமக்கு உன்னிடமுள்ள அருளைக்    
     கொடையாகத் தருவாயாக; நீ மிகப் பெரும் கொடையாளன்" (ஆலு இம்ரான்: 8)
2. நல்ல மனிதர்களுடனான உறவை அதிகரித்தல்; பொதுவாகவும் தனிப்பட்ட
     முறையிலும் இஸ்லாத்தைப் பற்றிய 
    சிந்தனைகளைப் பெற்றுக் கொள்ளல்.
3. நல்லடியார்களின் வரலாற்றக் குறிப்பாக ஸஹாபாக்களின் வரலாற்றைக்
    கற்றல்; இது உள்ளத்தில் உயர்ந்த இலக்கைத் 
    தோற்றுவிக்கும்.
4. அதிகமன உபதேசங்களைச் செவிமடுத்தல்
5. அடிப்படையான பர்ழுகளில் ஆர்வம் கொள்ளுதல் 
6. சிறிய அள்வாயினும் நபிலான வணகங்களைத் தொடர்ந்து செய்ய முயலுதல்
7. அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுதலும் அதனை மனனம் செய்தலும்
    மனனித்தவற்றைத்  தொழுகைகளில் ஓதுதலும்
8. அதிகம் திக்ர், இஸ்திஃபார்களில் ஈடுபடுதல். இது ஈமானை அதிகரிப்பதுடன்
    உள்ளத்தையும் உயிர்ப்பிக்கும்.
9. உள்ளத்தைப் பாதிக்கும் மோசமான நண்பர்கள், மோசமான காட்சிகள்,
    நிகழ்வுகள் முதலானவற்றிலிருந்து முழுமையாகத் 
    தூரமாகுதல்.
10. அடிக்கடி தௌபா செய்து கொள்ளுதல்

நன்றி, பயணம் (03ம் இதழ் 2011)

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

Laylatul Qadr ­ the Night of Power


The month of Ramadhan has been singled out for special worship (`Ibadat) and exclusive favours. It is a month unlike other months. One reason for this, as defined by the Qur'an, is because the Holy Qur'an was revealed in this month. Says Allah in Sura al­Baqarah: The month of Ramadhan, that in which the Qur'an was sent down; a guidance for mankind, and clear signs of guidance and distinction (2:185). In fact, according to a hadith of the 6th Imam (a), the other holy books were also revealed in this month.

Among the nights of Ramadhan is one special night, which is better than a thousand months (HQ, 97:3). Good deeds performed on that single night are equal to those performed over a thousand months. It is the Night of Power (Laylatul Qadr), when the Qur'an was revealed. Some commentators believe it was the night when the Qur'an was brought down from Baytul M`amur (Heavenly abode), for Jibrael to reveal in parts to the Prophet (s). Others say it was the night when the Prophet received the entire Qur'an, but was asked to transmit it as and when the occasion demanded.

Laylatul Qadr is a celebration to commemorate the arrival of the final guidance for humans. It is a tribute to the commencement of the message revealed to mankind by their Creator, a message which shows them the way to achieve happiness in both the worlds. Just as the arrival of a child is celebrated, on its birth and then every year, as a bringer of joy and fulfillment for the family, Laylatul Qadr is celebrated as a bringer of light and guidance for mankind. Unlike the birthday which is celebrated with a feast for the senses, Laylatul Qadr includes a feast for the spirit, a feast of worship and prayers.

Some Ahadith indicate that the fate of every believer for the coming year is decreed on this night. That is why the Du`as for this night ask for special favours in the decree for the year. Believers are encouraged to stay awake the entire night, and pray for blessings and forgiveness. It is the holiest night of the year, and it would be unwise to be heedless of the tremendous benefits of this night.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இந்தியா முதலிடம்


உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயால் இதயம், சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படுகிறது. பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இருந்தால் இந்நோயை கட்டுப்படுத்தலாம். கிராமப்புறங்களில் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் பேரும், நகர் புறங்களில் 12 சதவீதம் முதல் 17 சதவீதம் பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவை மூலம் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சென்னையில் படிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் அதிக உடல் பருமனுடன் இருக்கிறார்கள். இவர்கள் உடல் பருமனை குறைக்க வேண்டும். மழை காலங்களின் தகுந்த முன் எச்சரிக்கை எடுத்ததால் தற்போது நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


பெல்ஜியத்தில் அல்குர்ஆனிய இணைய வானொலி


பெல்ஜியத்தின் அண்டோப் நகரிலுள்ள 'பைத்துல் குர்ஆன்' நிறுவனம், ஐரோப்பாவின் முதலாவது குர்ஆனிய இணைய வானொலியை www.baitoalkoran.com எனும் இணைய முகவரியில் ஆரம்பித்து வைத்துள்ளது.


புதன், 24 ஆகஸ்ட், 2011

ரமழானில் உங்களுடைய நாள் ஏன் இவ்வாறு அமையக் கூடாது?


புனித ரமளான் மாதத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். மற்ற நாட்களை மாற்றமான வழியில் கழிப்பவர்கள்கூட, நோன்பு நாட்களைக் கண்ணியமான முறையில் செலவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ரமளான் மாதத்தின் பகல் பொழுதையும் இரவு நேரத்தையும் வணக்க வழிபாடுகளில் செலவழிக்க வேண்டும் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும். எந்த வழிபாடுகள் என்பதோ, அந்த வழிபாடுகளை எந்த நேரத்தில், எந்த வரிசைப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதோ பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.

எனவே, ரமளான் மாதத்திற்கு ஒரு கால அட்டவணை இருந்தால் கடைப்பிடிக்க இலகுவாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. அந்த அட்டவணை ஏன் கீழ்க்கண்டவாறு இருக்கக் கூடாது? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

புனித ரமளான் வழிபாடுகளில் உண்ணா நோன்பு முதலிடத்தைப் பெறுகிறது. அடுத்து தொழுகை. தொழுகையில் கடமையான தொழுகையும் உண்டு; கூடுதல் தொழுகையும் உண்டு. அடுத்து குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், துஆ, தானதர்மங்கள் (ஸதகா) என வழிபாடுகள் அணிவகுக்கின்றன.

நள்ளிரவு வழிபாடு
நோன்பாளிகள் சஹர் உணவு உட்கொள்வதற்காகப் பின்னிரவில் உறக்கத்திலிருந்து விழிப்பது வழக்கம். சற்று முன்கூட்டியே எழுந்தால், அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தமிழகத்தைப் பொருத்தவரையில் நள்ளிரவு 2 மணிக்கு எழுவது பொருத்தமாயிருக்கும்.

தஹஜ்ஜுத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது மக்களுக்குச் சொன்ன முதலாவது அறிவுரை இதுதான்: மக்களே! சலாம் எனும் முகமனைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும்போது (நீங்கள் விழித்திருந்து) தொழுங்கள்! சொர்க்கத்தில் சுகமாக நுழைவீர்கள். (திர்மிதீ)

எனவே, நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்து ‘தஹஜ்ஜுத்’ எனும் இரவுத் தொழுகை தொழ வேண்டும். இரண்டிரண்டு ரக்அத்களாக எட்டு ரக்அத்கள் தொழ வேண்டும். அவரவருக்குத் தெரிந்த குர்ஆன் அத்தியாயங்களை ஓதித் தொழலாம்.

எனினும், ருகூஉவில் வழக்கமாக ஓதும் தஸ்பீஹுடன் பின்வரும் தஸ்பீஹையும் சேர்த்து ஓதுவது நல்லது.

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ .

சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.

பொருள்: இறைவனே! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 60, தஸ்பீஹ் எண் - 34)

அவ்வாறே, ருகூஉவிலிருந்து எழும்போது வழக்கமாகச் சொல்லும் سَمِعَ الله لِمَنْ حَمِدَهْ
உடன்

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْداً كَثِيْراً طَيِّباً مُّبَارَكاً فِيْهِ .

ரப்பனா வ லக்கல் ஹம்து, ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி.
எனும் புகழ்மாலையையும் சேர்த்து ஓத வேண்டும்.

பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 62, துஆ எண் - 39)

அவ்வாறே, சஜ்தாவில் வழக்கமான தஸ்பீஹ் ஓதியபின்ஸ

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ .

சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.

பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 64, தஸ்பீஹ் எண் - 42)

இரு சஜ்தாக்களுக்கிடையே..

اَللّهُمَّ اغْفِرْ لِيْ ، وَارْحَمْنِيْ ،وَاهْدِنِيْ ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ ، وَارْزُقْنِيْ ، وَارْفَعْنِيْ .

அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்புர்னீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ, வர்ஃபஉனீ.

பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக. எனக்கு ஏற்படுகின்ற சோதனைகளை நிவர்த்திப்பாயாக. எனக்கு விமோசனம் வழங்குவாயாக. எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக. என்னை மேலோங்கச் செய்வாயாக. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 67, துஆ எண் - 49)

தொழுகை அமர்வில், அத்தஹிய்யாத், வழக்கமான ஸலவாத் ஆகியவற்றை ஓதியபின் பின்வரும் துஆக்கள் ஓதுவது கூடுதல் பலன்தரும்:

اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْماً كَثِيْراً ، وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ ،

فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ .

அல்லாஹும்ம இன்னீ ளலம்த்து நஃப்சீ ளுல்மன் கஸீரா, வ லா யஃக்ஃபிருத் துனூப

இல்லா அன்த்த, ஃபஃக்ஃபிர் லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்திக்க வர்ஹம்னீ

இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்.

பொருள்: இறைவா! எனக்கு நானே வெகுவாக அநீதி இழைத்துக்கொண்டேன். உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக. எனக்கு அருள் புரிவாயாக. நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்.

(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 73, துஆ எண் - 57)

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ، .

وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ .

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மசீஹித் தஜ்ஜால், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஅஸமி வல்மஃக்ரம்.

பொருள்: இறைவா! அடக்கத் தலத்தின் (கப்றின்) வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (மாபெரும் குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோரு கிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 72, துஆ எண் - 56)

اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ

وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلهِ إِلاَّ أَنْتَ .

அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து,

வ மா அஅலன்த்து, வ மா அஸ்ரஃப்த்து, வ மா அன்த்த அஅலமு பிஹி மின்னீ,

அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, லா இலாஹ இல்லா அன்த்த.

பொருள்: இறைவா! நான் முந்திச் செய்த, பிந்திச் செய்(ய இருக்)கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்ன பிற) பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே முன்னேறச் செய்பவன். நீயே பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 74, துஆ எண் - 58)
திக்ர்

அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஹ் ஓத வேண்டும். "அல்லாஹ்வை திக்ர் செய்வதால் உள்ளங்கள் அமைதியடைகின்றன" (13:28) என்கிறது திருக்குர்ஆன். உங்களுக்குத் தெரிந்த திக்ருகளை ஓதலாம்; இருந்தாலும், நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள திக்ருகளே சிறப்புக்குரியவை ஆகும். பின்வரும் திக்ருகள் நபிமொழிகளில் இடம்பெற்றவையாக இருப்பதால் இவற்றை ஓதிவாருங்கள்:

سُبْحَانَ الله(33 ) சுப்ஹானல்லாஹ் (33) - அல்லாஹ் தூயவன்.

وَالْحَمْدُ لله(33 ) அல்ஹம்து லில்லாஹ் (33) - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

وَالله أَكْبَرُ (33 ) அல்லாஹு அக்பர் (33) - அல்லாஹ் மிகப் பெரியவன்.

أَسْتَغْفِرُ الله (100 ) அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (100) - அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.

لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ،

لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْر .

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து,

வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் ஏகன். அவனுக்கு இணையானவன் யாருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்துப் பொருட்கள்மீதும் ஆற்றல் உள்ளவன்.

(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 84, துஆ எண் - 69)

اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ

وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ

عَليَّ وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
.

அல்லாஹும்ம அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த்த, கலக்த்தனீ வ அன அப்துக்க,

வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்த்ததஅத்து, அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஉத்து, அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ பி தன்பீ ஃபஃக்ஃபிர் லீ ஃப இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.
பொருள்: இறைவா! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குக் கொடுத்த உறுதிமொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளேன் என்று உன்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக. ஏனெனில், பாவத்தை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.

(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 100, துஆ எண் - 79)

حَسْبِيَ الله لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْم .

ஹஸ்பியல்லாஹ், லா இலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்த்து,

வ ஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்

பொருள்: அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். அவன் மகத்தான அரியணையின் (அர்ஷின்) அதிபதி ஆவான். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 104, துஆ எண் - 83)

بِسْمِ الله الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ .

பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ழி

வ லா ஃபிஸ்ஸமாஇ வ ஹுவஸ் ஸமீஉல் அலீம்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (பாதுகாப்புக் கோருகிறேன்). அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியாது. அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான் . (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 107, துஆ எண் - 86)

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ .

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்.

பொருள்: அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளின் மூலம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 113, துஆ எண் - 97)

لاَ إِلهَ إِلاَّ الله ُالْعَظِيْمُ الْحَلِيْمُ ، لاَ إِلهَ إِلاَّ الله ُرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ،

لاَ إِلهَ إِلاَّ الله ُرَبُّ السَّموَاتِ وَرَبُّ اْلأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ .

லா இலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அளீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் மகத்தானவனும் சாந்தமானவனும் ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் மகத் தான அரியணையின் (அர்ஷின்) அதிபதி ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் சங்கைக்குரிய அரியணையின் அதிபதியும் ஆவான். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 135, துஆ எண் - 122)

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله .

லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்

யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே அன்றி வேறு யார் மூலமும் இல்லை.

(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 151, துஆ எண் - 152)

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ ، كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ ،

وَعَلى آلِ إِبْرَاهِيْمَ ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ

كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ ، وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ .

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத், கமா ஸல்லைத்த

அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத்,

அல்லாஹும்மபாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத், கமா பாரக்த்த

அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத்

பொருள்: இறைவா! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய்.

இறைவா! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்வளம் வழங்கியதைப் போன்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக் கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்வளம் வழங்குவாயாக. நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 70, துஆ எண் - 53)

துஆ
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது அல்லாஹ் கீழ்வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்" என்று கூறுகின்றான். (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 6321)

அல்லாஹ்விடம் நீங்கள் கேட்க விரும்பும் எந்தக் கோரிக்கையையும் உங்களுக்குத் தெரிந்த எந்த மொழியிலும் கேட்கலாம். இருப்பினும், குர்ஆனில் இடம்பெறுகின்ற துஆக்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள துஆக்களும் சிறப்புக்குரியவை ஆகும். அத்தகைய துஆக்களை ஓதிப் பயனடையலாம்.

குர்ஆன் ஓதுதல்

இதற்குமேல் நேரம் இருந்தால் சஹரிலேயே குர்ஆன் ஓதலாம். குர்ஆன் ஓதுவதன் சிறப்பு குறித்து நிறைய ஹதீஸ்கள் வந்துள்ளன. திருக்குர்ஆனை ஓதிவருபவருக்காக மறுமையில் குர்ஆன் பரிந்துரைக்கும். அதன் பரிந்துரை ஏற்கப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்னது அஹ்மத்)

ரமளானில் மூன்று முறை குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் திட்டமிடலாம். அப்படியானால் நாளொன்றுக்கு 3 பாகம் (ஜுஸ்உ) ஓத வேண்டும். சஹரில் ஒரு ஜுஸ்உ; நோன்பு துறந்தபின் ஒரு ஜுஸ்உ; பகலில் ஒரு ஜுஸ்உ. இவ்வாறு ஓதிவந்தால், மூன்று குர்ஆன் முடியும். அல்லது 2 முறை குர்ஆனை முடிக்கலாம். தராவீஹில் ஹாஃபிள் ஓதுவதைக் கவனமாக்க் கேட்டால், அது ஒரு குர்ஆன் ஆகிவிடும்.

தொழுகையும் தர்மமும்

ரமளான் மாத்த்தில் ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதுவிட வேண்டும். அத்துடன் ஃபர்ளுக்கு முந்திய மற்றும் பிந்திய சுன்னத்துகளையும் தவறாமல் தொழுதுவிட வேண்டும்.

அத்துடன், ரமளான் மாத்த்தின் சிறப்புத்தொழுகையான ‘தராவீஹ்’ தொழுகையில் கலந்துகொண்டு, இயன்றவரை முழுமையாகத் தொழுதுவர வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்புனித மாத்த்தில் அதிகமாகத் தர்ம்ம் செய்வார்களாம்! ஆகவே, இம்மாதத்தில் தானதர்மங்கள் செய்துவாருங்கள். நோன்பாளி நோன்பு துறப்பதற்கு உதவுங்கள்; மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்ட பெண்கள், ஏழை மாணவர்கள், கௌரவமாக வாழ்ந்து பிள்ளைகளால் துரத்தப்பட்ட பெரியவர்கள் ஆகியோரின் உணவு, உடை உள்ளிட்ட அவசியத் தேவைகள் நிறைவேற உதவுங்கள்.

‘ஸகாத்’ ரமளானில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், மாதத்தின் சிறப்பைக் கருதி இம்மாதத்தில் ஸகாத் நிறைவேற்றலாம்.

ஆக, புனித ரமளான் மாதத்தைத் திட்டமிட்டு நேரங்களைப் பிரித்துக் கொண்டு பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். அதன் மூலம், இம்மையிலும் மறுமையிலும் நலற்பலன் அடைவோம்!

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

மனிதனின் ஆயுள்


அகிலம் வாழும் மனிதனின் ஆயுள்
அறுபது ஆண்டு எனில் - அவனது
முப்பது ஆண்டுகள் இரவின் இருளுள்
மூழ்கி அழிந்திடுமே!

எதுவும் தெரியா சிறுமனத்தோடு
எங்கும் அலைந்திடுவான் - அதனால்
பதினைந்தாண்டுகள் பார்த்திருக்கையில்
பாழ்பட்டொழிந்திடுமே!

பேராசையே மனதிற் கொண்டு
பெரும் பொருள் திரட்டிடுவான் - அவனது
ஆயுளில் ஐந்து ஆண்டுகள் கழிந்து
அசதியும் கண்டிடுவான்!

எஞ்சிய பத்து ஆண்டுகளெல்லாம்
ஏக்கமும் நரையும் விழும் - தொடர்ந்து
உலகைப் பிரியும் நாளை நினைத்து
உள்ளம் துன்பமுறும்!

கூடிய காலம் வாழ்ந்திடவேதான்
மனிதன் ஏங்குகிறான் - ஆனால்
நாடிய இறைவனின் நாட்டம் எதுவோ
அதுவே நடக்கிறது!

(இறுக்கம்)

சனி, 20 ஆகஸ்ட், 2011

உலர் உணவு விநியோகம்


சுமார் 130 ஏழை முஸ்லிம் சகோதரர்களுக்கான மேற்படி நிகழ்வொன்று கடந்த 19. 08. 2011. வெள்ளிக்கிழமை காலை, கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் சமூக சேவைப் பிரிவும் செரண்டிப் நிதியமும் இணைந்து இவ்வேற்பாட்டைச் செய்திருந்தன. இதன்போது, 130 ஏழைச் சகோதரர்களைத் தெரிவு செய்வதற்கு "ஏழைகளின் தோழன்" நஜீம் நானாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப் பட்டது.

மாற்று மத சகோதரர்களுடனான இப்தார் ஒன்றுகூடல்



இஸ்லாமிய கலாசாரத்தையும் ரமழான் தொடர்பான நடைமுறைகளையும்  பரஸ்பரம் அறிந்து கொள்ளும் நோக்கில். மாற்று மத சகோதரர்களுடனான இப்தார்  நிகழ்ச்சியொன்றை. எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது, 22-08-2011 அன்று, கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் நடத்துவதற்கு கஹட்டோவிட்ட கல்விச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த இப்தார் நிகழ்வில் எமது பிரதேசத்தில் எம்மோடு தொடர்புகள் வைத்துள்ள சகோதரர்களே கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் எனத் தெரிகிறது.

கவிக்கோவின் பார்வையில் ரமளான்

ரமளான் என்றால்
'எரிப்பது' என்று பொருள்.
அது பாபங்களை எரிக்கிறது.

ஒவ்வொரு ரமளானும் உண்ணா
நோன்பு என்ற அதிசயமான
நெருப்பைக் கொண்டு வருகிறது.

அது மனிதனை
எரிக்கும் நெருப்புக்களைக்
கூட எரிக்கும்
நெருப்பாய் இருக்கிறது.

அது ஏழைகளின்
வயிற்றில் எரியும்
நெருப்பைப்
பணக்காரனின் வயிற்றில்
கொண்டு போய்
வைக்கிறது.

தானும் ஏழையும்
சக உதரர்களே என்ற
ஞானம் அவனுக்குப்
பிறக்கிறது.
சகோதரத்துவத்தை
அவன் வயிற்றால் கற்றுக்
கொள்கிறான்.

பசிகளில் இரண்டு
வகை இருக்கிறது.
ஒன்று வறுமைப் பசி,
மற்றொன்று நோன்புப் பசி.
அது சாபம்.
இது வரம்.

வறுமைப் பசி கலக நெருப்பு.
பண்பாட்டுத் தோட்டத்தில் மலரும்
எல்லாப் பூக்களையும்
அது எரித்து விடுகிறது.

நோன்புப் பசி புடம் போடும்
நெருப்பு.
அழுக்குகளை எரித்து
ஆன்மாவைப்
பத்தரைமாற்றுத்
தங்கமாக்குகிறது.

நோன்புப் பசியே
ஆன்மாவின்
விருந்தாகிறது.

நோன்புப் பசி
மகத்தான் பிச்சைப்
பாத்திரமாக இருக்கிறது.
அதில், இறைவனே
பிச்சையாக விழுந்து
விடுகிறான்.

('இல்லையிலும் இருக்கிறான்' என்ற கவிக்கோவின் நூலின் இறைவனே பிச்சை என்ற அத்தியாயத்திலிருந்து......)

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தலைவலி தீர பத்து ஆலோசனைகள்.


‘ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி.

தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கீழ்க்கண்ட எளிய வழிகளைக் கடைபிடித்துப் பாருங்கள். தலைவலி உங்கள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காது.
1. கண்ணுக்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கண்ணுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.  கண்ணின் பார்வை குறைவு படும்போது கண் மருத்துவரை அணுகி கண்ணாடி போட்டுக் கொள்வது முக்கியமானது.
2. படுத்துக் கொண்டு படிக்காதீர்கள், பயணத்தின் போது படிக்காதீர்கள், மிக அதிக வெளிச்சம் – மிகக் குறைந்த வெளிச்சம் ஆகிய சூழலில் படிக்காதீர்கள், மிகச் சிறிய  எழுத்துரு கொண்ட புத்தகங்களைப் படிக்காதீர்கள், தெளிவான எழுத்துக்களற்ற ஒளியச்சுப் பிரதிகளைப் படிக்காதீர்கள்.
 இவை எல்லாமே கண்ணை அதிக அழுத்தத்திற்குள் தள்ளி தலைவலிக்கு அழைப்பு விடுக்கும்.
 தொலைக்காட்சி பார்க்கும் போதோ, கணினியில் வேலை செய்யும் போதோ அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். இருட்டு அறையில் இவற்றைச் செய்வது கண்ணை  மிகவும் பலவீனப்படுத்தும்.
 அதிக வெளிச்சமானவற்றை நேரடியாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்
.
3. கண்ணுக்கு அதிக வேலை கொடுக்கும் பணியெனில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அதை  அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
 இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை இருபது வினாடிகள் இருபது அடி தொலைவிலுள்ள பொருளைப் பாருங்கள். கண்ணின் மேல் வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி  வைத்து கண்ணை இதப்படுத்துங்கள்.
 கண்ணுக்கு பயிற்சி கொடுங்கள். கருவிழிகளை மேல், கீழ், இடம், வலம் என எல்லைகளுக்கு அசைத்தும், மூக்கை நோக்கிக் குவித்தும் பயிற்சி கொடுங்கள்.  இவையெல்லாம் கண்ணை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தலைவலி வரும் வாய்ப்பும் குறையும்.
4. கண்ணைப் போலவே, பல்லும் தலைவலிக்கு காரணகர்த்தாவாகி விடும் வாய்ப்பு உண்டு. உங்கள் பல்லை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் சரியில்லாமல்  இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்யுங்கள்.
 அடுத்தபடியாக காதைக் கவனியுங்கள். அதிக சத்தம் தலைவலிக்கு துணைவன். அதிக சத்தத்தை தவிர்க்க வேண்டும். சத்தமான சூழலில் வேலை செய்ய வேண்டிய  கட்டாயம் இருந்தால் சத்தம் கேட்காதபடி காதில் எதையாவது மாட்டிக் கொள்தல் உசிதம்.
5. சரியான நேரத்தில் உண்ணுங்கள். ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சிலருக்கு தயிர் சாதம் சாப்பிட்ட உடன் தலைவலி வரும்  எனில் அதை விட்டு விடுங்கள். நிறைய காரெட் சாப்பிடுங்கள். கண்ணுக்கு அது மிகவும் நல்லது. அதிலுள்ள வைட்டமின் எ கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
 காஃபைன் மூலக்கூறுகளை விலக்கி விடவேண்டும். காஃபி, குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.
 தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கும் தலைவலிக்கும் தொடர்பு இருக்கிறது  என்பது வியப்பூட்டும் செய்தி. உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் போகும் போது தலைவலி வெகுண்டெழுகிறது
6. புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும். புகை மூளையில் மெல்லிய துளைகள் வழியே பயணிக்கும். தலைவலியை தருவிக்கும் முக்கிய காரணியாக புகையின் நிக்கோட்டின்  உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அதேபோல தூசு கூட தலை வலி வருவிக்க வல்லது. எனவே சுத்தமான இடங்களில் நடமாட முயலுங்கள். வீட்டை  தூய்மையாக வைத்திருங்கள்.
 வாசனைப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையையும் தலைவலியையும் உண்டாக்கும். ஏதேனும் வாசனை உங்களை அசெளகரியப் படுத்துவதாய் நீங்கள் உணர்ந்தால் அதை  நிச்சயமாய் விலக்கி விடுங்கள்
.
7. தலைவலி வருமோ, வருமோ என கவலைப்படாதீர்கள். தலைவலியைக் குறித்தே நினைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது உளவியல்  உண்மை.
 கவலை தலைவலியின் நெருங்கிய தோழன். கவலை வந்தால் கூடவே தலைவலியும் தோழனைப் பார்க்க வந்து விடும். எனவே மனதையும், உடலையும் இயல்பாக,  இறுக்கமற்று வைத்திருங்கள். உங்களை எரிச்சலடையச் செய்யும் நிகழ்வுகளையோ, மனிதர்களையோ தவிருங்கள். யோகா, தியானம் போன்றவற்றைப் பின்பற்றலாம்.
8. இருக்கையில் நேராக அமராமல் இருப்பது கூட தலைவலியை தருவிக்க வல்லது. எனவே இருக்கையில் அமரும் போது சரியான முறையில் அமருங்கள்.
 நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிவதும், இதமான நிறங்களிலுள்ள ஆடைகளை அணிவதும் கூட தலைவலியைத் தவிர்க்க உதவும். வீட்டிலும் கூட அடர்  நிறங்களைத் தவிர்த்து இதமான நிறங்களை சுவர்களுக்குப் பூசுவது சிறப்பானது
9. அதிக வெயிலிலோ, அதிக மழையிலோ அலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பருவத்தின் முதல் மழை காற்றின் மாசோடு கலந்து தரையிறங்கும். அதை தலையில் வாங்காதீர்கள்.
சரியான தூக்க முறையைக் கடைபிடியுங்கள். அளவான தூக்கம் அவசியமானது. அதிக தூக்கமோ, குறைந்த தூக்கமோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
10. தூய்மையாய் இருங்கள். நன்றாக குளியுங்கள். குளித்தபின் தலையை நன்றாகத் துவட்டி விடுங்கள். அதற்காக டிரையர் வாங்கி உபயோகிப்பதைத் தவிருங்கள்.
ஆவி பிடித்தல் சைனஸ் போன்ற தலைவலிகளுக்கு சிறந்தது. மூச்சுப்பாதையை தெளிவாக்கி தலைவலியை தவிர்க்க அது உதவும். தினமும் ஒருமுறை ஆவி பிடிப்பது  அத்தகையோருக்கு ஆசுவாசம் தரும்.
.
இந்த சிறு சிறு வழிகளைக் கடைபிடித்தால் தலைவலி வரும் வாய்ப்புகளை பெருமளவுக்குக் குறைக்க முடியும்.

நோன்பு


Post image for நோன்பு



செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சிக்குன்-குனியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு


சிக்குன்-குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்-குனியா நோய் சில ஆண்டுகளுக்கு முன் பல நாடுகளையும் பாதித்தது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக் கப்படாமல் இருந்தது.

தற்போது, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிக்குன்-குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன்-குனியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து, பரிசோதனை ரீதியாக எலிக்குப் பயன்படுத்தப்பட்டு, அதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

‘மனிதர்களுக்கு இந்த மருந்து எந்த விதத்தில் செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின், இதற்கு அனுமதி கிடைக்கும். இந்த தடுப்பூசி தயாரிப்பு செலவும் குறைவுதான் என டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

உஸ்மானிய சாம்ராஜ்யம்


c]khdpa rhk;uh[;aj;jpd; mbj;jskhf tpsq;fpatH c];khd; fh]p vd;w NguurH MthH. ,tUf;F ,uz;L kfd;fs; ,Ue;jdH. ,tuJ %j;j kfd; Ml;rpg; gjtpf;F jFjpaw;wtuhf ,Ue;j fhuzj;jhy;> jdf;Fg; gpwF jdJ Ml;rpg; gjtpf;fhd thhprhf jdJ ,isa kfd; XHfhd; vd;gtiu muruhf epakpj;jhH c];khd; fh]p.

கடற்படை மீது முஸ்லிம் மக்கள் தாக்குதல்

(கிண்ணியாவில் பதுகாப்புப் படையினருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக ஒரு தமிழ் வெப்தளம் வெளியிட்டிருந்த கருத்து சிந்தனைக்குரியது. 'யுத்தம் முடிந்த கையுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மேற்கொள்ளப்படலாம்' என்ற சந்தேகத்தை இது ஓரளவு ஊர்ஜிதம் செய்வது போல் இருக்கிறது. நமது பிரச்சினைகளை பல கண்ணோட்டத்திலும் அணுகுவது, எமது இருப்புக்கு வரும் அச்சுறுத்தல்களை அறிந்து கொள்ள உதவலாம் என்ற வகையில் அந்த கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன.)

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது


(காலத்தின் முக்கியத்துவம் கருதி செய்க் அகாரின் தளத்தில் வெளியான இந்த ஆக்கத்தை பளிச் வாசகர்களோடு பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.)

புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.

உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம்.

தண்ணீரில் இயங்கும் கார் இலங்கை வாலிபர் சாதனை !


பெட்ரோல் டீசல் விலைகளை வைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரசாங்கம் கைவைத்து பூச்சாண்டி காட்டும் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இலங்கை வாலிபரான 'துஷார ஹெதிரிசிங்க " சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார் .

ஆம் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார் இந்த இளைஞர் தமது சோதனை முயற்சியாக 3 லீடர் தண்ணீரை எரிபொருளாக பயன் படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இந்த காரில் இல்லை என்பதாகும் .

வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முற்சிகளை மேற்கொண்டும் இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்ததாக தெரிவிற்கும் துஷாரவிற்கு உள்நாட்டில் இவரை ஊக்குவிக்கவும் இந்த தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் யாரும் முன்வராதது வேதனையான உண்மையாகும் .

இவரது முயற்சி வெற்றி பெறவும் இந்த தொழிநுட்பம் மிக சீக்கிரமாக மக்கள் பாவனைக்கு கிடைத்திடவும் துஷாரவை வாழ்த்திடுவோம் .

புதன், 10 ஆகஸ்ட், 2011

மேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.


இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணினி அதாவது Cloud Computing. கணினியில் உள்ள ஹார்டிஸ்க் ( Hard Disk)-ல் நம் தகவல்களை சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும் , பதிவேற்றியதை தரவிக்கவும் 100 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம் இதைப்பற்றித்தான இந்தப்பதிவு. படம் 1 நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது... Intly


திங்கள், 8 ஆகஸ்ட், 2011

Fat Attack!


YOU ARE FAT.  You don't look good. In another ten or fifteen years, not only
will you look bad, you will also feel bad. This is the state of nearly one in three kids between the ages of two and nineteen in the United States. he prevalence of diseases
associated with being overweight and obese grows steadily. Adopting healthy habits at a younger age will ensure easier maintenance of a healthy lifestyle in adulthood. It will also greatly reduce both physical and mental stress. he first step in adopting healthy habits to educate yourself on the dangers of being overweight.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்


பிறப்பு முதல் நபித்துவம் வரை

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே இவ்வாறு கூறியுள்ளார்கள்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ரமழான் 27ம் நாள் இரவுதானா லைலதுல் கத்ர்?


கேள்வி:
சில மக்கள் ரமளானின் மற்றைய இரவுகளை விடவும் ஒரு குறிப்பிட்ட இரவை லைலதுல் கத்ர் என,பல வகையான வணக்க வழிபாடுகளில் மூலம் கழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இது சரியான வழிமுறையை சேர்ந்தது தானா ?

நல்வழிகாட்டி அல்குர்ஆன்


இறைவனின் உன்னதப் படைப்பினமாகிய மனித வாழ்வின் சகல துறைகளுக்குமான நல்வழிகாட்டல்களை, வழங்கி நிற்கும் தூய அல்லாஹ்வின் வாக்கும் தீர்ப்புமான புனித அல்-குர்ஆனை மக்கள் சமுதாயத்தினருக்கு அருட்கொடையாக அருளினான்.
11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், 11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு இருந்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் லேத் பட்டறை வைத்து நடத்துகிறார்.இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்க செயலர்.

நோன்பு


நோன்பு (Sawm, அரபு மொழி: صوم‎) என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அநுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமைல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்[1].இது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

ராஜபக்சவைத் திருப்பி அடித்த தமிழர்கள்..



 
  
ராகுல் காந்தி குடிசைகளில் நுழைந்து கூழ் குடித்துவிட்டு போஸ் கொடுத்த போதிலும், காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு மரண அடி கிடைத்தது.
1அதே மரண அடி இலங்கையில் ராஜபக்சேவுக்கு கிடைத்திருக்கிறது.
லட்சக்கணக்கான தமிழச்ச்சிகளின் தாலிகளைப் பறித்தெடுத்து, பொட்டுகளை அழித்தெடுத்த சுவடை மறைக்க பேரம் பேசி சில தமிழச்சிகள் தனக்கு பொட்டு வைப்பதாய் விளம்பரப்படுத்தினார் ராஜபக்சே. தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீதெல்லாம் மினி போர் தொடுத்து மிரட்டிப் பார்த்தார்.  ஆனால் எதற்கும் மசியாமல்இது எங்கள் ஈழம்.. இங்கே உனக்கு வேலையில்லைஎன்று ராஜபக்சேவை உள்ளாட்சித் தேர்தலில் விரட்டி அடித்திருக்கின்றனர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள்.
1976-ம் ஆண்டு நிறைவேற்றிய வட்டுக் கோட்டை தீர்மானத்தை இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் மீண்டும் வழிமொழிந்திருக்கிறார்கள் ஈழத்து மக்கள்.ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் ஈழப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.இந்தத் தேர்தலின் முடிவுகளை அளறி மாளிகையில் உடற்பயிற்சி செய்தபடி கேட்டுக்கொண்டிருந்த ராஜபக்சே, சிங்களர்கள் நிறைந்த தெற்கில் தன் கட்சி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, ஈழப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரேயடியாக வென்றத்தில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்து - இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள்



வரலாற்றுக் கண்ணோட்டத்தில்பல்வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியைநோக்கும் எவரும் ஒவ்வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக்கப்பட்டுவந்துள்ளனது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்களும் பண்பாடுகளும் மோதிமுட்டிக் கலக்கும் நிலையிற்றான்

வியாழன், 28 ஜூலை, 2011

சாதனைக்கு மேல் சாதனை புரிந்து வரும் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மற்றுமொரு சாதனை

கடந்த ஜூலை மாதம் 7ம் திகதி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கம்பஹ வலய தமிழ்-முஸ்லிம் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் கஹட்டோவிட்ட மகளிர் கல்லூரி 10 நிகழ்ச்சிகளில் தனது சாதனையை நிலைநாட்டிக் கொண்டது. அதில் வெற்றியீட்டிய மாணவர்களின் விபரங்கள் வருமாறு.


   Gr 1 சிறுவர் பாடல் - M.S.சஸ்னா 1 ம் இடம்
   Gr 1 சிறுவர் பாடல் R.R.ஆயிஷா ஹயா 3 ம் இடம்
   Gr 2 சிறுவர் பாடல் M.I.சுமா 2ம் இடம்
   Gr 3 சிறுவர் பாடல் K.R.ஸைனப் 2ம் இடம்
   Gr 3 சிறுவர் பாடல் A.W.S.சுமையா 3ம் இடம்
   Gr 4 சிறுவர் பாடல் M.A.A.ராபிதா 1ம் இடம்
   Gr 4 சிறுவர் பாடல் M.S.சிப்கா 3 ம் இடம்  
   Gr 5 சிறுவர் பாடல் M.F.F.பஸ்னா 1ம் இடம்

   Gr3 பேச்சு M.R.சாமா 2ம் இடம்
   Gr4 பேச்சு M.A.A.அமானி 3ம் இடம்
   Gr5 பேச்சு M.N.நிப்லா 1ம் இடம்
   Gr5 பேச்சு M.A.B.F.பஹ்மிதா 2ம் இடம்

   Gr 1 வாசிப்பு M.R.ஸஹ்லா ஹனா 2ம் இடம்
   Gr 2 வாசிப்பு H.F.F.அம்னா 2ம் இடம்
   Gr 2 வாசிப்பு M.R.F.ரிம்னா 3ம் இடம்
   Gr 3 வாசிப்பு M.R.F.சபீஹா 3ம் இடம்
   Gr 5 வாசிப்பு M.F.சப்னா 2ம் இடம்
   Gr 5 வாசிப்பு M.U.தைனப் அகீலா 2ம் இடம்

   Gr 5 கூட்டல் M.M.F.அபீபா 3ம் இடம்

   Gr 4 பெருக்கல் M.R.ரீமா ஹானி 1ம் இடம்
   Gr 5 பெருக்கல் M.N.F.பஸீஹா 1ம் இடம்

   Gr 5 வகுத்தல் M.M.F.முப்லா 2ம் இடம்

   Gr1 சித்திரம் A.A.F.  ஹாஜரா 2ம் இடம்
   
   Gr1 சொல்வதெழுதல் எம். எப். எப். அனா 1ம் இடம்
   Gr1 சொல்வதெழுதுதல் ஏ.ஆர். மின் ஹா 2ம் இடம்
   Gr2 சொல்வதெழுதுதல் எம். எஸ். எச். புஷ்ரா 1ம் இடம்
   Gr3 சொல்வதெழுதுதல் M.R.பஷாஇர் 2ம் இடம்
   Gr 3 சொல்வதெழுதுதல் M.M.F.முஹ்ததா 3ம் இடம்
   Gr4 சொல்வதெழுதுதல் M.M.F.அஸ்னா 1ம் இடம்
   Gr5 சொல்வதெழுதுதல் M.N.தபானி 2ம் இடம்

  Gr 4 ஆக்கம் - எழுத்து M.N.நூர்ஹானி 2ம் இடம்
  Gr 5 ஆக்கம் - எழுத்து M.R.ஹுமைதா 2ம் இடம்
   Gr5 ஆக்கம் - எழுத்து M.N.F.நுஸ்கா 3ம் இடம்

Gr1 உறுப்பெழுத்து M.M.சம்லா 1ம் இடம்
Gr2 உறுப்பெழுத்து M.H.ஹிஜா மர்யம் 2ம் இடம்
Gr3 உறுப்பெழுத்து M.N.F.நுஸ்கியா 1ம் இடம்
Gr4 உறுப்பெழுத்து M.A.F.மஹ்ரிபா 1ம் இடம்
4 உறுப்பெழுத்து I.A.F.இபாதா 3ம் இடம்
Gr5 உறுப்பெழுத்து M.M.ராசிதா 1 ம் இடம்       

செவ்வாய், 26 ஜூலை, 2011

இஸ்லாம் வேண்டி நிற்கும் குடும்ப வாழ்வு-கடமைகள், உரிமைகள


நேர்காணல்: ஜெம்ஸித்

அல்ஹுதா: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பம் என்ற நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறிது விளக்க முடியுமா?

சனி, 23 ஜூலை, 2011

உங்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகள்


உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.

கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி ( 1137 - மார்ச் 4, 1193)


இவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (Saladin) என அழைக்கப்படும் பிரபல இசுலாமியப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அயூபி பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முசுலிமான  சலாவுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று எருசலேமில் இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் இசுலாமிய சமூகத்தில் பிரபலமாக உள்ளார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக உள்ளார்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

சிலுவை யுத்தங்கள்


நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.

இஸ்லாமிய சினிமா


சினிமா என்பது நவீன கதை சொல்லும் வடிவம். மக்கள் கலையாகிப் போன ஓர் தனியான மொழி. கலைகளை நோக்கிய உள்ளீடுகள், அவற்றின் இயல்புக்கும், உள்ளிடுவோரின் உணர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு பண்புகளுடனான வெளியீடுகளாக உலகை அலங்கரிக்கும் சூழலில், சினிமா எனும் பரந்த களத்தில் ஊன்றப்படும் முரண்பட்ட விதைகளிலிருந்தும் வேறுபட்ட இயல்புக் கலவைகள் உயிர்ப்பெடுப்பது இயல்பானதாகும். மாற்று சினிமா தொடர்பான கதையாடல்களில் இஸ்லாமிய சினிமா என்ற எண்ணக்கரு முகிழ்ப்பதும் அது போன்றதே

மங்கோலியர் படையெடுப்பு


குலபாஉர் ராஷிதூன்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியின் போக்கு முற்றிலும் மாற்றம் கண்டது. இஸ்லாமிய ஆட்சி நடைமுறைகளில் உரோம, பாரசீக ஆடம்பர மரபுகள் பெருமளவு குடிபுகுந்தன. உமையாக்களும் அதன் பின் அப்பாஸியரும் அதன்பின் உஸ்மானியரும் என மாறி மாறி முஸ்லிம்களே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த போதிலும்,

வியாழன், 21 ஜூலை, 2011

சூழலால் ஏற்படும் தாக்கம்


ஓர் அரசன் தனது அரண்மனை ஊழியர்களனைவரையும் அழைத்து, சுற்றுப்புறச் சூழல் மனிதனை நிச்சயம் கெடுக்கும் என்று நான் சொல்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன எனக் கேட்டார். அனைவரும் உங்கள் கருத்தை நாங்கள் ஆமோதிக்கின்றோம் என்றார்கள். மந்திரி எழுந்து சொன்னார் : "அரசே! இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒருக்காலும் மனிதனை சுற்றுச் சூழல் கெடுக்காது. இது எனது வாதம்" என்றார். அரசருக்குக் கடுமையான கோபம் வந்தது. "இவரைக் கொண்டு போய் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வையுங்கள்" என உத்தரவிட்டார். 

புதன், 20 ஜூலை, 2011

புனித மக்காவில் கற்பழிப்பும் படுகொலையும்: சவூதியின் மற்றொரு கொடூரம்



புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு வந்திருந்த 15 வயது அல்ஜீரியச் சிறுமி சாரா காதிப், கடந்த சில தினங்களுக்கு முன் மக்காவிலுள்ள நப்ரஸ் ராஷிதிய்யா ஹோட்டலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களானகுர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில்தோன்றி வளர்ந்தது, ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்றஏனைய இஸ்லாமிய கலைகள் போன்று இஸ்லாத்தின் நிழலில் உருவாகிய தஸவ்வுப் பலராலும் தவறாகப்புரியப்பட்ட ஒரு கலையாக விளங்குகின்றது. சிலர் தஸவ்வுப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதைஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில்கிரேக்க தத்துவம் பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்தஒரு கலை எனக் குறிப்பிடுகின்றனர்.

திங்கள், 18 ஜூலை, 2011

கஹடோவிட பாலிகாவின் தேசிய சாதனை

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் கஹடோவிடாவைச் சேர்ந்த
செல்வி தபானி இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார். அவரை நாமும் வாழ்த்துவோம்.

வியாழன், 14 ஜூலை, 2011

கலப்புக் கல்வி தொடர்பிலான ஒரு பத்வா

ஆண், பெண் கலந்து கல்வி கற்பது தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஷெய்க் பின் பாஸ் அவர்கள் வழங்கிய பதிலை, முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் இடம் கொடுக்காததால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறோம். தமிழ் பிரசுரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 7 ஜூலை, 2011

கஹடோவிட மகளிர் கல்லூரியின் பிறிதொரு சாதனை

சமீபத்தில் நடைபெற்ற மாகாண மட்டங்களுக்கிடையிலான கணிதப் போட்டியில் கஹடோவிட மகளிர் கல்லூரி மூன்று முதலிடங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற இருக்கும் தேசிய கணிதப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. மேற்படி சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும்  ஊருக்கும் பெருமை தேடித்தந்த சகோதடிகளான; எம்.ஏ.எப். பஹ்ஜத்(தரம் 6), எம்.எஸ்.எப். ஸமீரா (தரம் 9), ஏ.ஆர்.எப். மித்ஹா (தரம் 10) ஆகியோரை நாம் மனதார வாழ்த்துகிறோம்.

கம்பகா வலய-மட்ட ஆரம்பப் பிரிவுப் போட்டிகள் - 2011

2011ம் ஆண்டில் ஆரம்பப் பிரிவுகளில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் கம்பஹா வலய மாணவ மாணவியருக்கான ஆரம்ப தினப் போட்டிகள் இன்று 07.07.2011. புதன் கிழமை காலை 9.00 மணியளவில் கஹடோவிட முஸ்லிம் மகளிர் கல்லூரியில்கோலாகலமாக

ஞாயிறு, 3 ஜூலை, 2011

அல் ஹிமா கல்வி நிறுவனத்தில் A/L உயர்தர கலை, வர்த்தக பாடங்கள் ஆரம்பம்


A/L உயர் தர மாணவர்களுக்கான கலை, வர்த்தக பாடங்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஓர் அங்குரார்ப்பணக் கூட்டம்

பைத்துல் முகத்தஸ்


நீண்ட பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ் மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் (அலை), தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய  ஹீப்ரு மொழியில் "பெத்ஹம்மிக்தாஷ்" எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

மிஃறாஜ்


இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் அல்லாஹ் அவர்களுக்கு பல்வேறு அற்புதங்களை வழங்கினான். அவற்றுள் முக்கியமானதே மிஃறாஜ் நிகழ்வு.
ஓர் இரவில்

வெள்ளி, 17 ஜூன், 2011

A/L வகுப்புகள் பாளிகாவில் ....?

கஹட்டோவிட்ட பாலிகா வித்தியாலயத்தில் அடுத்த வருடம் முதல் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஒரு செய்தி அடி படுகிறது. இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாமல் போனாலும், இவ்வருட சாதாரண தர பரீட்சையில் சித்தியடையும் மாணவிகளுக்கு, கலைத் துறையில், இந்த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக, காற்றோடு வந்த அந்த செய்தி கூறுகிறது.

பாளிகாவே, இது உன்னால் முடியுமா?




பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம்

புதிதாக வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தில், எமது ஊரைச் சேர்ந்த பலருக்கு எமது பாடசாலைகளிலேயே நியமனம் கிடைத்துள்ளது. பாளிகாவுக்கு மூன்று ஆசிரியைகளும் பத்ரியாவுக்கு ஒரு ஆசிரியையும் நியமனம் பெற்றுள்ளனர். மற்றும் நான்கு பேர் பக்கத்துப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது மிகவும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

கேட்டுச் சுவைத்த கவிதை ஒன்று

"என்னை மணம் முடிக்கும் போதுதான்
வரதட்சணையாகக் கேட்டாய்
பொன்னையும், பொருளையும்;

இறக்கும் போதும் கேட்கின்றாயே
வரதட்சணையாக
என் பூவையும் பொட்டையும்."

உளம் தொடும் ஒரு கதை

(எனது உள்ளத்தைத் தொட்ட இக்கதை உங்களது உள்ளத்தையும் தொடுகிறதா என வாசகர்களாகிய நீங்களும்தான் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன். நன்றி.)

 இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே எஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து

வியாழன், 9 ஜூன், 2011

கம்பஹா கல்வி வலய தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கஹட்டோவிட்ட பாலிகா சாதனை

மேற்படி போட்டி நிகழ்ச்சிகள் கடந்த மே மாதம் 30ம் திகதி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது தெரிந்ததே. இதன்போது 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு

இது எப்படி இருக்கு???

சவூதி அதியுயர் பீட அறிஞர் குழாத்தின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான ஷைக் அப்துல் முஹ்சின் அல்அபைகான் என்பவர், அண்மையில் பத்வா ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது பெண்கள் வாகனங்களை ஓட்ட முடியாது. அவ்வாறு ஓட்டுவது ஹராம் என்பதே அந்த பத்வாவாகும்.

இஸ்லாம் அனுமதித்த ஒன்றை தடுக்கும்

புகைபிடித்தலும் அதன் எச்சங்களும்..!

சிகரெட்..கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் விடமுடியாமல் இன்று பலர் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்..! இங்கே இதை படிக்கும் பெரும்பான்மையோர் சிகரெட் குடிப்பவர்கள்..!
'வேண்டாம்னா பட்டுன்னு விட்டுனனும்' என்று சொல்வது ஈஸி கண்ணா..ஆனால்

திங்கள், 23 மே, 2011

SB accepts the 4 main requests of Muslims for the training camp

From:
Abdul Mujeeb

The Supreme theological Body of Sri Lanka, All Ceylon Jamiyyathul Ulama (ACJU), All University Muslim Students Association (AumsA) and some Muslim intellectuals directly met the higher education minister, Hon,S.B.Dissanayake last night at his residence at colombo, to make an end to this issue  related to Muslims in the training program for university students

ஞாயிறு, 15 மே, 2011

அது ஒரு காகம்!

பெற்றொரின் திருப்தியில் இறைவனின் திருப்தி இருக்கிறது என்பது ஒரு நபி மொழி. "அவர்கள் கஷ்டத்துக்கு மேல் கஷ்டப்பட்டுத் தம் பிள்ளைகளைச் சுமந்து, பலசிரமங்க்களுக்கு மத்தியில் பெற்றெடுத்து ஆள்ளாக்கி விடுவதால் அவர்களைச் "சீ" என்று கூடக் கூறவேண்டாம் என இறவன் எச்சரிப்பது மாத்திரமன்றி அவர்களது முன்னிலையின் கண்ணியமாகவும் சங்கையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறான். இது இப்படி இருக்க

வியாழன், 12 மே, 2011

Refuge for Colonel Gadaffi in Island Paradise?

 Sri Lanka has in its history occasionally served as a refuge for persecuted personalities but it may have its most controversial refugee yet. Colonel Muammar Muhammad al-Gaddafi has reportedly secured an understanding with the Government to Sri Lanka to secure refuge in the country in the eventuality that he has to flee his native Libya. Sources from within the government confirmed that the offer was made to the Colonel in a telephone call recently following a number of losses by forces loyal to Colonel Gadaffi.

புதன், 4 மே, 2011

பின் லாடனின் கொலையில் துலங்கும் மர்மம்


கொல்லப்பட்ட பின் லாடனின் படம் அமெரிக்காவால் வெளிவிடப்பட்டதல்ல. அது பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியால் வெளிவிடப்பட்டது.
அது போலியானது என்று

செவ்வாய், 3 மே, 2011

உஸாமா பின் லாதின் படுகொலை - ஹமாஸ் கண்டனம்


அல் காயிதா போராளி இயக்கத்தின் தலைவரான உஸாமா பின் லாதினை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க  இராணுவம் சுட்டு கொன்றதற்கு பலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயீல் ஹனிய்யா வெளியிட்டுள்ள செய்தி பின்வருமறு:

நல்ல கணவன்


குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியரிடையே ஆயிரம் பிரச்சினைகள் தோன்றலாம் இது இயல்பானதே. பிரச்சினைகளே இல்லாது வழ்வதும் அசாத்தியமானதே. அப்படியானால்

திங்கள், 2 மே, 2011

ஒரு தியாகியை இழக்கிறோம்!

உஸாமா பின் லாதின் மரணமான செய்தி உலகெங்குமுள்ள அமெரிக்க அபிமானிகளுக்கு அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி யதார்த்தமானதும் கூட. ஏனெனில், உஸாமாவை தங்களது எமனாகவே இவர்களில் பலர் கருதி வந்தனர்.

உலகின் பார்வையில் உஸாமா ஒரு பயங்கரவாதி.